Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைரவர் வழிபாடு எந்த கிழமைகளில் செய்வதால் பலன்கள் கிடைக்கும்...?

Webdunia
கலியுகத்திற்கு உகந்த முக்கியமான வழிபாடாகக் கருதப்படுவதே கால பைரவர் வழிபாடாகும். பூவுலகம் என்பது காலம் இடம் என்று இரு தத்துவங்களுக்கு உட்பட்டு விளங்குவதால் காலத்தை உரிய முறையில் வழிபடும் முறையை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். அத்தகைய வழிபாடுகளில் ஒன்றே கால பைரவர்  வழிபாடு.

பைரவரை வழிபட எந்தெந்த கிழமைகள் சிறப்பானது, பைரவர் எந்த கிழமைகளில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை: ராகு காலத்தில்  ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் திருமணப்பேறு கிடைக்கும்.
 
திங்கட்கிழமை: வில்வார்ச்சனை செய்தால் சிவன் அருள் கிடைக்கும்.
 
செவ்வாய்க்கிழமை: மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்பப் பெறலாம்.
 
புதன்கிழமை: நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.
 
வியாழக்கிழமை: விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூன்யம் விலகும்.
 
வெள்ளிக்கிழமை: மாலையில் வில்வ அர்ச்சனை செய்து வந்தால் செல்வச் செழிப்பு உண்டாகும்.
 
சனிக்கிழமை: சனி பகவானுக்கு குரு பைரவர், ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டமச்  சனி விலகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – துலாம்! | December 2024 Monthly Horoscope| Thulam | Libra

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கன்னி! | December 2024 Monthly Horoscope| Kanni | Virgo

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – சிம்மம்! | December 2024 Monthly Horoscope| Simham

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கடகம்! | December 2024 Monthly Horoscope| Kadagam

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மிதுனம்! | December 2024 Monthly Horoscope| Mithunam

அடுத்த கட்டுரையில்
Show comments