Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவபெருமான் தன் உடல் முழுதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம் என்ன தெரியுமா?

Webdunia
சிவபெருமான் மற்ற கடவுள்களைப் போல் ஆரம்பர அலங்காரம் ஏதும் இல்லாமல், எப்போதுமே எளிமையான தோற்றத்தில் காணப்படுவார். குறிப்பாக இவரது உடை மற்றும் அணிகலன்கள் முற்றிலும் வேறுபட்டவையாக காணப்படும்.

 
அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள மற்ற கடவுள்களை போல் அல்லாமல், வாழ்வாதாரத்திற்கு தேவையான குறைந்தபட்ச  தேவைபாடுகளுடன் சிவபெருமான் சித்தரிக்கப்பட்டுள்ளார். தன் இடுப்பைச் சுற்றி இடது தோள்பட்டை வரை புலித்தோல் ஆடை, கழுத்தை சுற்றி பாம்பு, ஜடாமுனியில் அரை நிலவு, திரிசூலம் மற்றும் உடல் முழுவதும் பூசப்பட்ட சாம்பல் - இதுவே  அவருடைய அடையாளம்.
 
சிவபெருமான் உடலில் உள்ள ஒவ்வொரு கூறுகளும் ஒவ்வொன்றை உணர்த்துவதாக அமைந்துள்ளது. அவை முறையே  விடாமுயற்சி, அமைதி, பயம், நேரம் மற்றும் காமம் ஆகியவற்றை வெல்வதைக் குறிக்கும். அதே போல் அவர் உடல் முழுவதும்  பூசிக்கொண்டுள்ள சாம்பல் முதன்மையான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது இறந்தவர்களுடன் ஆத்ம ரீதியான  தொடர்பைக் கொண்டுள்ளது.
 
இறந்த பிறகு எஞ்சியிருப்பது சாம்பல் என்ற இந்த புனிதமான விபூதி தூய்மையைக் குறிக்கும். இந்த சாம்பல் உணர்ச்சிகள்,  காமம், பேராசை மற்றும் பயம் போன்ற பூலோக தொடர்புகளுக்கு அப்பாற்பட்டது. சிவபெருமான் தன் உடல் முழுவதும் இந்த  சாம்பலை பூசிக்கொள்வது, இறந்தவர்களின் தூய்மையைப் பறைசாற்றும்.
 
ஆதிசக்தியின் அவதாரம் மற்றும் தன் முதல் மனைவியுமான சதி, தன்னை தானே தீக்கிரையாக்கிக் கொண்ட போது, சிவபெருமானால் தன் ஆத்திரம், வலி மற்றும் வேதனையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அவரின் பிணத்தை  எடுத்துக் கொண்டு தடுமாற்றத்துடன் ஓடினார்.
 
அப்போது விஷ்ணு பகவான் சதியின் பிணத்தை தொட்டவுடன் அவர் சாம்பலாகி போனார். தன் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத சிவபெருமான், அவர் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உடல் முழுவதும் தன் மனைவியின் சாம்பலை பூசிக்கொண்டார்.

 

மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்பக்குளத்தின் சிறப்புகள்

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து நன்மை தரும்! - இன்றைய ராசி பலன் (04.05.2024)!

மீனாட்சி அம்மன் கோவிலில் வன்னிமரத்தடி விநாயகர் கோவில்

இந்த ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவி இடையே கருத்து வேற்றுமை நீங்கும்! - இன்றைய ராசி பலன் (03.05.2024)!

வன்னி மரத்தை வணங்குவதால் ஏற்படும் பலன்கள்

அடுத்த கட்டுரையில்