Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வது குறித்து பார்க்கலாம்

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (23:43 IST)
லட்சுமி குபேர பூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே செய்து முடித்துவிடுவது நல்லது. 
 
தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது  மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும்.
 
அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம். குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில்  நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த  வழிபாட்டைச் செய்ய வேண்டும். 
 
இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, அளகாபுரி அரசே போற்றி... என்று துவங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி  வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே  போடுவதுமாக இருக்க வேண்டும்.  
 
குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர  வழிபாட்டை மேற்கொள்வதோடு, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பு.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – விருச்சிகம்! | December 2024 Monthly Horoscope| Viruchigam | Scorpio

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – துலாம்! | December 2024 Monthly Horoscope| Thulam | Libra

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கன்னி! | December 2024 Monthly Horoscope| Kanni | Virgo

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – சிம்மம்! | December 2024 Monthly Horoscope| Simham

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கடகம்! | December 2024 Monthly Horoscope| Kadagam

அடுத்த கட்டுரையில்
Show comments