Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவராத்திரியில் உள்ள வகைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (16:58 IST)
ஆடி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி மிகவும் முக்கியமானது. இந்த நாளில் சிவபெருமானை வணங்குவதன் மூலம் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற முடியும்.


மாத சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நமசிவாயம் சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் இவர் அருள் மழை பொழியச் செய்வார் என்கிறார்கள்.

சிவராத்திரியில் பல வகைகள் காணப்படுகின்றன. அவை மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று குறிப்பிடப்பட்டு வருகின்றது. ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.

குறிப்பாக மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று அமாவாசைக்கு முந்தைய நாள் அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

புராணங்களில் மகா சிவராத்திரியை குறித்த பல கதைகள் வழக்கத்தில் உள்ளன. எல்லா கதைகளிலும் குறிப்பிடப்பட்டு கூறப்படும் ஒரு பலன் என்றால் அது ‘இறுதி மோட்சம்’ என்பது தான். மகா சிவராத்திரியில் விரதம் இருப்போருக்கு நினைத்த காரியங்கள் கைகூடும்.

பொருளாதார முன்னேற்றம் அடைந்து சகல வளங்களும் வெகு விரைவில் கிட்டும். வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் தடையின்றி நிறைவேறும். அனைத்து பாவங்களும் நீங்கி இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைந்து மோட்சம் பெறுவோம். மாத சிவராத்திரிகளில் விரதம் இருந்து முடிந்தவரை இயலாதவர்களுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். இவ்வாறு முறையாக வழிபடுவதன் மூலம் இறுதி காலத்தில் நிம்மதியாக வாழ்ந்துவிட்டு மோட்சம் அடையலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா தொடக்கம்.. டிசம்பர் 13ஆம் தேதி மகாதீபம்..!

தென் திருமுல்லைவாயல்: முக்தியும் மோட்சமும் கொடுக்கும் கோயில்..!

இந்த ராசிக்காரர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தீரும்!– இன்றைய ராசி பலன்கள்(30.11.2024)!

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கன்னி! | December 2024 Monthly Horoscope| Kanni | Pisces

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கும்பம்! | December 2024 Monthly Horoscope| Aquarius | Kumbam

அடுத்த கட்டுரையில்
Show comments