Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவராத்திரி பண்டிகையின் சிறப்புக்களும் தெரிந்துக்கொள்ள வேண்டியவைகளும் !!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (18:32 IST)
விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.


நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர் தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.  நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.

நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்‌ஷரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.

பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி, ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.

Edited by Sasikala

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாபெரியவர் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி முக்தி தினம்: சிறப்பு ஆராதனைக்கு ஏற்பாடு

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை! - 50 இடங்களில் நேரலைக்கு ஏற்பாடு!

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம்!– இன்றைய ராசி பலன்கள்(26.12.2024)!

இந்த ராசிக்காரர்களுக்கு வீட்டில் மகிழ்ச்சி பெருகும்!– இன்றைய ராசி பலன்கள்(25.12.2024)!

சந்திராஷ்டமம் என்றால் என்ன? கணக்கிடுவது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments