Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்மிகத்தில் பின்பற்றப்படும் முன்னோர்களின் ஆரோக்கிய பழக்கங்கள்!

Webdunia
அதிகாலையில் எழுந்ததும் விநாயகப் பெருமான் முன்னிலையில் குட்டுப் போடுதல் மற்றும் தோப்புக்கரணம் போடுதல்  போன்றவை எமது முன்னோர்களின் காலத்தில் இருந்தே வழக்கமாக உள்ளது.



முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு வழக்க முறையிலும் பல்வேறு ஆரோக்கிய அர்த்தங்கள் இருக்கின்றது. இது போன்று பல ஆரோக்கிய பழக்கங்களை எமது முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். 
 
காதுகளில் உள்ள 200 நரம்புகளில் சீராக இரத்த ஓட்டம் ஏற்படுவதற்கும் புதிய இரத்தம் உருவாகி ஞாபக சக்தியை  வளர்ப்பதற்கும் குட்டுப் போடுதல் மற்றும் தோப்புக்கரணம் போடுதல் பெரிதும் உதவுகிறது. எனவே தான் சாதரணமாகக் கூட  குழந்தைகளுக்கு மறதி ஏற்படாமல் இருக்க தோப்புக்கரணம் போடுவது, மோதிரக் கையினால் குட்டுப் போட வேண்டும் என்று  கூறுகின்றார்கள்.
 
ஒவ்வொருவரும் அதிகாலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி படுக்கையில் இருந்து எழுந்திருக்க வேண்டும். அப்படி  செய்தால், அன்றைய நாளில் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்குமாம். காலையில் எழுந்தவுடன் முதலில்  உச்சரிக்கும் வார்த்தை நேர்மறைச் சிந்தனையோடு இருக்க வேண்டும். அது தெய்வப் பெயர்களாகக் கூட உச்சரிக்கலாம்.
 
காலையில் எழுந்து முதலில் உள்ளங்கையைப் பார்த்த பின் பூமியைத் தொட்டு வணங்கி, அதன் பின் காலைக் கடன்களைத் தொடர்ந்தால், ஒவ்வொரு நாளும் உற்சாகமாகச் செயல்படும் என்று கூறுகின்றார்கள்.

 

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கன்னி! | December 2024 Monthly Horoscope| Kanni | Virgo

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – சிம்மம்! | December 2024 Monthly Horoscope| Simham

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கடகம்! | December 2024 Monthly Horoscope| Kadagam

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மிதுனம்! | December 2024 Monthly Horoscope| Mithunam

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – ரிஷபம்! | December 2024 Monthly Horoscope| Rishabam

அடுத்த கட்டுரையில்
Show comments