Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் மெட்டி அணிய காரணம் என்ன தெரியுமா...?

Webdunia
பெண்ணுக்கு பெருமையும், மங்கலமும் தரக்கூடிய அணிகலன்களுள் முக்கியமானது மெட்டி. திருமணம் ஆனதும் கால் கட்டை  விரலுக்கு அடுத்த விரலில் பெண்கள் மெட்டி அணிவர், அந்த விரலில் மட்டும் மெட்டி அணிய வேண்டும், என்று பெரியோர்கள்  சொல்லி வைத்ததற்கு காரணம் உண்டு.
 
 
கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இம்மெட்டி நடக்கும் போது  அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகின்றது, அதனால்தான் திருமணத்தில் பெண்கள் காலில் மெட்டியை அணிகின்றனர். காலில் கீழ்ப்பகுதியில் இதயம் முதல் மூளை நரம்புகள் வரை எல்லாவற்றையும்  கட்டுப்படுத்தும் மிக நுண்ணிய நரம்பு ஸ்தானம் உள்ளன.
 
மெட்டி தேய்ந்த பிறகு தூக்கி எறியக் கூடாது. அதை அப்படியே கடையில் கொடுத்து உருக்கி வரும் புது வெள்ளியால் தான்  மறுபடியும் மெட்டி செய்ய வேண்டும். எந்த காரணம் கொண்டும் மெட்டியை காலிலிருந்து நீக்கலாகாது என்பர் பெரியோர்கள்.  அக்காலத்தில் மணமகனுக்கும் மெட்டி உண்டு என்று திருமங்கை ஆழ்வாரின் வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது. இப்பொழுதும் கூட திருமணத்தின் போது ஆண்களுக்கும் மெட்டி அணியும் பழக்கம் உண்டு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்!– இன்றைய ராசி பலன்கள்(21.11.2024)!

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும்!– இன்றைய ராசி பலன்கள்(20.11.2024)!

அய்யப்பன் வழிபாட்டில் பேட்டை துள்ளல்.. முக்கிய சடங்கின் முழு விவரங்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்களால் நன்மை ஏற்படும்!– இன்றைய ராசி பலன்கள்(19.11.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments