சுவாமிமலை கோவிலில் சித்திரை திருவிழா: பக்தர்கள் பரவசம்..!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (19:23 IST)
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் சித்திரை திருவிழா நாளை தொடங்க இருப்பதாக கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்க இருப்பதாக கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் மே 6ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும் என்றும் ஏழாம் தேதி நடராஜர் சிவகாமி அம்மாள் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர். மே எட்டாம் தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை கோவில் இயக்குனர் தெரிவித்துள்ளனர்

சித்திரை திருவிழாவை ஒட்டி பக்தர்கள் அதிகம் வருகை தருவார்கள் என்பதால் சுவாமி மலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்புடன் செய்யப்பட்டுள்ளன.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் திடீரென நெரிசல் குறைந்தது: 30 நிமிடங்களில் தரிசனம்.. என்ன காரணம்?

தீராத தோல் நோய் தொல்லையா? இந்த கோவிலுக்கு உடனே போங்க..!

இன்று கார்த்திகை தீபம்: விளக்கு ஏற்றுவதன் முறைகளும் பலன்களும்!

திருப்பதி வைகுண்ட ஏகாதசி: 24 லட்சம் விண்ணப்பங்கள்; இன்று குலுக்கல்!

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments