Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டு பலன்கள் !!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (10:32 IST)
இன்றைய சங்கடஹர சதுர்த்தி ஆனி மாத சனி வாரத்தில் வருவதால் மிகவும் சக்தி வாய்ந்தது. எந்த பூஜையானாலும் விநாயகருக்கே முதலில் பூஜை நடைபெறுகிறது.


பார்வதி தேவி சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து ஸ்ரீ பரமேஸ்வரவரரை கரம் பிடித்தார். த்ரிபுராசுரர்களை வதம் செய்ய சிவபெருமான் புறப்படும் போது விநாயகரை வழிபட மறந்து விட்டார். உடனே தேர்ச் சக்கரத்தை உடைய செய்தார் விநாயகர்.

உண்மை நிலையை உணர்ந்த சிவபெருமான் தன் ஞான த்ருஷ்டியால் உணர்ந்து விநாயகரை வழிபட்டு வெற்றி கண்டார். சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடுங்கள்.

விநாயகரை வணங்கினால் வினைகள் தீரும். கணங்களின் அதிபதி ஆதலால் இவர் கணபதியாவார். விக்னங்களை போக்குபவர் விநாயகர். விநாயகருக்கு உகந்த விரதம் சதுர்த்தி விரதம்.

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியே விநாயகர் சதுர்த்தியாகவும் துன்பங்கள், துயரங்கள், சங்கடங்களை நீக்கி சகல சௌபாக்கியத்தையும் தரக்கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம்.

திதி வரிசையில் நான்காவது வரும் திதி சதுர்த்தி திதியாகும். இதில் தேய்பிறையில் வரும் 4வது திதியை சங்கட ஹர சதுர்த்தி திதி என்கிறோம். இந்த சதுர்த்தி விரதம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வேண்டி, இருக்கும் விரதம்.

சங்கடஹர சதுர்த்தி என்பது சந்திரன் உதயமாகும் போது விநாயகரை வழிபட்டு சந்திரனுக்கு பூஜை செய்வதாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி நாளில் காலையிலிருந்து விரதம் மேற்கொண்டு விநாயகரை வழிபட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – துலாம்! | January 2025 Monthly Horoscope Thulam

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா! இன்று மாலை கோலாகல தொடக்கம்!

1 லட்சத்து 8 வடைகளால் பிரம்மாண்ட மாலை! நாமக்கல் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்!

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கன்னி! | January 2025 Monthly Horoscope Kanni

இந்த ராசிக்காரர்களுக்கு பணப்பிரச்சினை நீங்கும்!– இன்றைய ராசி பலன்கள்(30.12.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments