Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்க்கையில் மனிதனுக்கு 5 விதமான தோஷங்கள் பற்றி...

Webdunia
ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது. 
 
அந்த தோஷங்கள் 
 
1. வஞ்சித தோஷம்
2. பந்த தோஷம்
3. கல்பித தோஷம்
4. வந்தூலக தோஷம்
5. ப்ரணகால தோஷம்

 
வஞ்சித தோஷம்:
 
பார்க்கக் கூடாத படங்கள், வெறியூட்டும் காட்சிகள் காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, அவை பித்த நாடிகளைப்  பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குகிறது. இதற்கு வஞ்சிததோஷம் எனப்பெயர். உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப்  பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வஞ்சித தோஷம் விலகிவிடும்.
 
பந்த தோஷம்:
 
நம்மை நம்பி பழகியவர்களுக்குத் துரோகம் செய்வது அல்லது பழிவாங்குதல் பந்த தோஷமாகும். இந்த தோஷத்துக்கு தந்தை,  தாய் வழிகளில் உள்ள மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஆகியோருடைய பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய  வேண்டும். இவ்வாறு செய்தால் பந்த தோஷம் விலகும்.
 
கல்பித தோஷம்:
 
பிறர் தன்னை விரும்புவதாக எண்ணிக் கொண்டு முறை தவறிப் பழகுதல் கல்பித தோஷமாகும். இத்தகைய தோஷம் ஏற்பட்டால் தன்னை விட வயதில் மூத்த பெண்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு  செய்தால் கல்பித தோஷம் உடனடியாக விலகி விடும்.
 
வந்தூலக தோஷம்:
 
ஒருவர் தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவருக்கு சுவாசக் கோளாறுகள், நரம்பு  சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். இவ்வாறு உருவாகும் தோஷத்திற்கு வந்தூலக தோஷம் எனப்படும். வந்தூலக தோஷம்  நீங்க வேண்டுமானால் வயதான தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.
 
ப்ரணகால தோஷம்:
 
திருமணப் பொருத்தங்கள் பார்க்காமல், பணம், புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு ஒருவர், திருமணம் செய்து கொண்டால், அவருக்கு ப்ரணகால தோஷம் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் பிடித்தம் இல்லாத நிலை காணப்படும். இந்த தோஷத்தை தவிர்க்க வேண்டுமானால் அனாதை விடுதியியில் உள்ள பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மீனம்!

பிப்ரவரி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கும்பம்!

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம், யாகசாலை பூஜை..!

பிப்ரவரி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

பிப்ரவரி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – தனுசு!

அடுத்த கட்டுரையில்
Show comments