Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ் மாஸ்க் போடும் முன் செய்ய வேண்டியவை என்ன...?

Webdunia
முகம், துளியும் இளமை மாறாமல் இருப்பதற்காகத்தான் என்பதை உணர்ந்து உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் மாஸ்க்குகளை தேர்ந்தெடுப்ப‍து அவசியம். அதனால் இந்த பேஸ்மாஸ்க் போடும்போது மிகுந்த கவனம் தேவை.

மாஸ்க்குகளை உபயோகிக்கும்முன் முகத்தை நன்கு கழுவி கொள்ள வேண்டும். மாஸ்க்கை முகத்தில் சரியாக ஒரேமாதிரி தடவி கொள்ளவேண்டும். உதடுகள், கண்கள் இவற்றை விட்டுவிடவேண்டும்.
 
களிமண் ஒரு சிறந்த மாஸ்க் ஆகும். ஏனென்றால் அது சருமத்தின் உள் இருக்கும் அழுக்கையும், மாசுகளையும் உறிஞ்சி விடும். தவிர களிமண்ணில் சருமத்திற்கு தேவையான தாது பொருட்கள் உள்ளன.
 
மாஸ்க்குகள் சருமத்திலிருந்து அழுக்குகளை நீக்குகின்றன. மாஸ்க்குகள் உபயோகிக்கும் முன் நீராவியால் முகத்தை சுத்தம் செய்து கொள்வது நல்லது. இதனால் சரும துவாரங்கள் விரிந்து அழுக்குகள் வெளியேறும். நீராவிக்கு வெறும் தண்ணீர் மட்டும் உபயோகிக்காமல் மூலிகை கஷாயங்களை சேர்த்து கொண்டால் இன்னும் நல்லது.
 
மாஸ்க்கை குறைந்தபட்சம் அரை மணிநேரம் வைத்திருக்க வேண்டும். மாஸ்க்கை எடுக்க நிறைய தண்ணீரை உபயோகிக்கவும். கடைகளில் கிடைக்கும் மாஸ்க்குகள் உரித்து எடுக்கும் வகையை சேர்ந்தவை.
 
மாஸ்க் போட்டவர்கள் பேசக்கூடாது. சரும நோய் உள்ளவர்கள் மாஸ்க் உபயோகிக்க கூடாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments