Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதங்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதால் என்ன பயன்கள் ?

Webdunia
ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களுடன் நேரடி தொடர்புடைய பல்வேறு உடலுறுப்புக்களில் உள்ள  பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

பாதங்களில் ஒருவர் தினமும் மசாஜ் செய்து வந்தால், அதனால் மன அழுத்தம் குறையும், உடல் ரிலாக்ஸ் அடையும், உடலில் இரத்த ஓட்டம் தூண்டப்படும், தூக்க  பிரச்சனைகள் தடுக்கப்படும், செரிமான பிரச்சனைகள் விலகும் மற்றும் சரும ஆரோக்கியம் மேம்படும்.
 
முக்கியமாக கர்ப்பிணிகள் இரவில் படுக்கும் போது பாத மசாஜ் செய்து வந்தால், உடலில் நீர்த்தேக்கத்தில் ஏற்படும் கால் வீக்கத்தைத் தடுக்க முடியும். உதாரணமாக, காலின் பெருவிரலோடு மூளை மற்றும் நுரையீரல் நேரடி தொடர்புக் கொண்டுள்ளது.
 
பெருவிரலில் மசாஜ் செய்தால் மூளை மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் தடுக்கப்படும். காலின் இரண்டாம், மூன்றாம், நான்காம் விரல்களில் கொடுக்கப்படும் அழுத்தம் பல் வலிக்கு உடனடி நிவாரணம் தரும். கடைசி சிறு விரல் காது வலியைக் குறைக்கும்.
 
தினமும் இரவில் படுக்கும் முன் சிறிது நேரம் பாதங்களை மசாஜ் செய்து விட்டு உறங்குங்கள். இதனால் உங்களுக்கு தெரியாமலேயே பல நன்மைகளை நீங்கள்  பெறுவீர்கள்.
 
நம் உடலின் ஒவ்வொரு பகுதிகளும் முக்கியத்துவம் கொண்டுள்ளது. அந்த வகையில் பாதங்களும் முக்கியதுவத்தை பெற்றுள்ளது. பாதங்களுக்கு நாம் தினமும் எண்ணெய் மசாஜ் செய்வதினால் நம் உடலில் ஏராளமான நன்மைகள் நிகழும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments