Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு கருவளையத்தை நீக்கும் வழிமுறைகள் !!

Webdunia
கருவளையம் வருவதற்கு காரணங்கள் பல உள்ளன. குறிப்பாக தூக்கமின்மை, மனஅழுத்தம், அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது, ஆரோக்கியமான உணவு உண்ணாமல் இருப்பது என கூறலாம்.

குறிப்பாக நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இயற்கை முறையில் எவ்வாறு கருவளையத்தை நீக்கலாம் என காண்போம். உருளைக்கிழங்கில் வைட்டமின் பி அதிகம் உள்ளது மேலும் காப்பர் பொட்டாசியம் வைட்டமின் சி போன்ற சத்துக்களும் உள்ளன. உருளைக்கிழங்கு நம்முடைய கருவளையத்தை போக்க மிகவும் உபயோகமாக இருக்கும். 
 
உருளைக்கிழங்கின் மேல் தோலை எடுத்துவிட்டு அதனை நன்றாக அரைத்து அந்த பேஸ்டை கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்து 20 நிமிடம் கழித்து தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும்.இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் நீங்கும்.
 
புதினா இலைகளில் உள்ள வைட்டமின் சி கருவளையம் போக்க மிகவும் உதவுகிறது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது. எனவே புதினா இலைகளை நன்றாக அரைத்து பேஸ்ட் போல செய்து அதனை கண்களில் மேல் தடவி 10 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் தூங்கும் முன் செய்து வந்தால் கருவளையம் நீங்கும்.
 
மஞ்சளில் உள்ள விட்டமின் நம்முடைய முகத்தை பிரகாசிக்கவும் மேலும் முகத்தில் உள்ள கருவளையத்தை நீக்கவும் உதவுகிறது. இதற்கு மஞ்சளை எடுத்துகொண்டு அதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல செய்து கண்களின் மேல் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்த நீரால் கழுவ வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் கருவளையம் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments