Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் உள்ள இயற்கை பொருட்களை கொண்டு பளபளப்பான சருமத்தை பெறவேண்டுமா...?

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (12:32 IST)
சருமத்திற்கு இயற்கை பொருட்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் பளபளக்கும் சருமத்தை பெறலாம். இவை நீண்ட காலம் எடுத்துக்கொண்டாலும் நிரந்தரமாக சரும பொலிவை மேம்படுத்திவிடும்.


தேன்: எந்த வகையான சருமமாக இருந்தாலும் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கும், சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதற்கும் தேன் சிறந்த பொருள். இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும். சரும நலன் காக்கும் பாக்டீரியாக்களை கொண்டிருக்கும். சிறிதளவு தேனை சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவிவிடலாம். சருமத்திற்கு ஊட்டமளிப்பதோடு இறந்த சரும செல்களை அகற்றவும் தேன் உதவும்.

மஞ்சள்: மஞ்சளில் உள்ளடங்கி இருக்கும் குர்குமின் இயற்கையான ஆன்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது சருமத்திற்கு பளபளப்பை தருவதோடு மட்டுமல்லாமல் வீக்கத்தைப் போக்கவும், சருமத்தை புத்துணர்ச்சி அடைய உதவும்.

தேங்காய் எண்ணெய்: நோய்த்தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குவதற்கும், தோல் மறுசீரமைப்புக்கும், விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுப்பதற்கும் துணைபுரியும் சிறந்த இயற்கை மூலப்பொருளாக தேங்காய் எண்ணெய் விளங்குகிறது. வறண்ட சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சுரைசராகவும் செயல்படக்கூடியது. தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து சருமத்தில் இறந்த செல்களை நீக்க உதவும் ஸ்கிரப்பராக பயன்படுத்தலாம்.

கற்றாழை: கற்றாழை சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் பண்புகளையும் கொண்டது. புதிய சரும செல்களின் வளர்ச்சியை தூண்டக்கூடியது. சருமத்திற்கு இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பளபளப்பை கொடுக்க வல்லது. மஞ்சள், தேன், பால் மற்றும் தண்ணீர் ஆகியவற்றுடன் கற்றாழை ஜெல்லை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யலாம். சுமார் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் சருமம் பொலிவடையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments