Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கையான முறையில் முகத்தின் பொலிவை அதிகரிக்கும் மஞ்சள் !!

Webdunia
முக்கியமாக மஞ்சள் தூள் முகப் பொலிவை அதிகரிப்பதோடு, பருக்கள், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போன்ற பல சரும பிரச்சனைகளையும் போக்கும். 


அக்காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் மஞ்சளை அன்றாடம் பயன்படுத்தியதால், இளமையான தோற்றத்தில் காணப்பட்டார்கள்.
 
மஞ்சளைக் கொண்டு ஒருவர் அடிக்கடி வீட்டிலேயே ஃபேஸ் பேக் போட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், அழற்சி எதிர்ப்பு போன்ற மருத்துவ பண்புகளால் சருமத்தின் அழகு மேம்படும்.
 
* ஒரு பௌலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ளவேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊறவைக்கவேண்டும். பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இறுதியில் நேச்சுரல்  ஸ்கின் டோனரான ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தைத் துடையுங்கள்.
 
* ஒரு சிறிய பௌலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 2-3 துளிகள் லாவெண்டர் ஆயில் மற்றும் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த ஃபேஸ் பேக் கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு காய வைக்கவேண்டும். இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
 
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேனில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு காயவைக்கவேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 3-4 முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் என்னென்ன?

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அத்திப்பழம்.. இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்..!

வறண்ட சருமம் பிரச்சனைக்கு என்னென்ன உணவுகள்? இதோ ஒரு பட்டியல்..!

இந்த 5 வகை மீன் சாப்பிட்டால் மாரடைப்பு நோய் வராதாம்..!

ஆபத்தான நிலையை எட்டும் உடல் பருமன்.. இந்தியாவில் 45 கோடி பேர்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments