Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபட தக்காளி ஃபேஸ் பேக்...!!

Webdunia
தக்காளியை தினமும் முகத்தில் தேய்த்து ஊறவைத்து கழுவி வந்தால் பெறும் நன்மைகள் என்னவென்றும், தக்காளியை வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்றும் பார்ப்போம்.

தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டைக் கொண்டு முகத்தை தேய்த்து 15 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
எண்ணெய் பசை நீங்கும் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்தால், அதனைத் தவிர்க்க தக்காளியை தினமும் முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து  கழுவுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
 
தக்காளி ஃபேஸ் வாஷ் தினமும் மாலையில் வீட்டிற்கு வந்ததும் முகத்தைக் கழுவும் போது சோப்பைப் பயன்படுத்தாமல், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் உடன்,  சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி வர, சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக  வெளியேறும்.
 
தக்காளி சாற்றுடன், சிறிது தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1 முறை போட்டு வந்தால், முகத்தின் அழகு மேம்படும்.
 
தக்காளியை துண்டாக்கி தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து விடுங்கள். பின் 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். பின் பாருங்கள் முகம் பொலிவுடன்  காணப்படும்.
 
முகப்பரு பருக்களால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இச்செயலை செய்து வந்தால், முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதற்கு அதில் உள்ள வைட்டமின்  ஏ மற்றும் சி தான் காரணம்.
 
சருமத் துளைகள் சுருங்கும் சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும். இது ஒருவரின் முகத்தை மிகவும் அசிங்கமாக வெளிக்காட்டும். இதனைத் தவிர்க்க, தினமும் தக்காளியை துண்டாக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் விரிவடைந்த சருமத் துளைகள் சுருங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments