Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சரும அழகை அதிகரிக்க டிப்ஸ்...!!

Webdunia
இயற்கையான முறையில் வீட்டிலேயே சரும அழகை அதிகரிக்க, பலவகையான இயற்கை அழகு குறிப்புகள் உள்ளது. சருமத்தின் பொலிவை அதிகரிக்க சிட்ரஸ் பழங்கள் மிகவும் சிறந்தது. குறிப்பாக அவற்றின் தோல்களில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த ஆலிவ் ஆயில் ப்ளீச் மிகவும் சிறந்த ஒன்று. எனவே என்றும் முகம் பளிச்சென்று இருக்க  ஆலிவ் ஆயிலை ஒரு ஸ்பூன் எடுத்து, அவற்றை சிறிதளவு சர்க்க்கரையை சேர்த்து சருமத்தில், இந்த கலவையை நன்றாக அப்ளை செய்து.  சிறிது நேரம் ஸ்க்ரப் செய்யுங்கள். பின்பு சருமத்தை கழுவவேண்டும்.
 
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தின் தோலை சூரிய வெப்பத்தில் 2 நாட்கள் காய வைத்து, பொடி செய்து, அதோடு மில்க் க்ரீம்  சேர்த்து கலந்து, பேஸ்ட் போல் செய்து கொண்டு, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச  வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை என்று தொடர்ந்து செய்தால், முகம் பளிச்சென்று இருக்க, இந்த ப்ளீச் நல்ல  பலன்தரும்.
 
தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின் கழுவினால் முகம் பட்டுப் போன்று மின்னும். இந்த முறையினை தினமும் செய்து வர சருமம் ஆரோக்கியமாக இருக்கும், அதேபோல் என்றும் சருமம் பளிச்சென்று  இருக்கும்.
 
வெள்ளரிக்காயின் சிறிய துண்டை எடுத்து அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் போல்  கலந்து, முகத்திற்கு மாஸ்க் போன்று போட்டு, ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகம் பொலிவோடு காணப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

பசித்த பின் புசி.. பசிக்காமல் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..

சிவனின் அருளைப் பெற உதவும் சிவ நமஸ்காரம் எனும் அற்புத யோகப் பயிற்சி!

வெரிகோஸ் வெயின் நோய் யாருக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பு?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments