Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொடுகு தொல்லை விரைவில் குறைய உதவும் குறிப்புகள் !!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (14:05 IST)
வேப்பிலையை பேஸ்ட் போல அரைத்து குளிப்பதற்கு அரை மணிநேரம் முன்பாக தலையில் தேய்த்து ஊறவைத்து பின் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இரவு தூங்கும் போது வேப்பிலை, துளசி இரண்டையும் தலைக்கு கீழே வைத்துக் கொண்டு தூங்கினால் பேன் குறைந்து விடும்.
 
வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊறவைத்து மறு நாள் அந்த வெந்தயத்துடன் தேங்காய் பால் சேர்த்து நைசாக அரைத்து பின் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து பின் குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை விரைவில் குறைய தொடங்கும்.
 
நம் குளிக்கும் தண்ணீரில் முதல் நாள் இரவே வேப்பிலையை போட்டு வைத்து மறு நாள் அந்த தண்ணீரில் குளித்து வந்தால் பேன் குறைந்து விடும்.
 
குப்பை மேனி கீரை சாறு எடுத்து அதை குளிக்கும் முன் தலையில் தேய்த்து பின் குளித்து வரவேண்டும்.
 
10 பூண்டுகளை தோல் சீவி மைய அரைத்துக் கொள்ளுங்கள், இத்துடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுழுவதும் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிக்கவும்.
 
பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும், இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் ஹேர்பேக்காக போட்டுக் கொள்ளவும், சுமார் ஒரு மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments