Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைகளில் உள்ள கருமை நிறத்தை போக்கி வெள்ளையாக்க சில டிப்ஸ் !!

Webdunia
கைகளில் உள்ள கருமையைப் போக்கி, கைகளை வெள்ளையாக்குவதற்கான சில டிப்ஸ். எலுமிச்சை மற்றும் சர்க்கரை கலவை ஒரே வாரத்தில் சருமத்திற்கு நல்ல நிறத்தை அளிக்கும். 
 

அதற்கு 2 ஸ்பூன் சர்க்கரையில், பாதி எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து ஊற்றி, அதனை கைகளில் தடவி மென்மையாக 5-10 நிமிடம் தேய்க்க வேண்டும். அதன் பின் 5 நிமிடம் கழித்து நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.
 
ஒரு பௌலில் 4-5 ஸ்பூன் பால் எடுத்து, அதில் 2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் 8-10 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அந்த கலவையை கைகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும் 10 நிமிடம் நன்கு ஊறிய பின், இறுதியில் நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.
 
2:1 என்ற விகிதத்தில் மஞ்சள் தூள் மற்றும் சந்தன பொடியை எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள கைகளில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இறுதியில் கைகளில் நீரில் ஊற வைத்து 3-5 நிமிடம் கழித்து கைகளைத் தேய்த்து கழுவி, துணியால் துடைக்க வேண்டும்.
 
பப்பாளிக்காய் துண்டை எடுத்து, அதன் மென்மையான உட்பகுதியால் கைகளை 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். 1-2 நிமிடம் கழித்து, சுடுநீரில் நனைத்த துணியால் கைகளைத் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், கைகளில் உள்ள கருமை மறையும்.
 
உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, கருமையாக இருக்கும் இரு கைகளிலும் 10-15 நிமிடம் தொடர்ந்து தேய்க்க வேண்டும். அதன் பின் நீரா கைகளைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைகள் நல்ல நிறத்தைப் பெறுவதைக் காணலாம்.
 
கற்றாழையில் சரும செல்களுக்குத் தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் கற்றாழை சருமத்தில் உள்ள இறந்த செல்களையும் போக்கும். இஞ்சிக்கும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் சக்தி உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து சருமத்திற்கு பயன்படுத்த, கைகளில் உள்ள கருமை நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments