Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடிக்கு அதிக அளவு போஷக்கினை கொடுத்து முடி உதிர்வை தடுக்க சில குறிப்புக்கள் !!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (18:06 IST)
வாரம் ஒருமுறை குளிப்பதற்கு முன் தயிரை ஒரு அரைமணி நேரம் தலையில் ஊற வைத்து குளிப்பதால் கேசத்துக்கு ஊட்டசத்து கிடைத்து முடி கொட்டுவது குறையும்.


தேங்காய்ப்பால் கொண்டு தலைமுடியை அலசுவதின் மூலம்  முடி கொட்டுவதில் இருந்து விடுபடலாம்.

வெதுவெதுப்பான எண்ணையை தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம். இதன் மூலம் தலையில் இரத்த ஓட்டம் அதிகமாக பாய்ந்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைகின்றன.

வேப்பிலையை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் தலைமுடியை அலசுவதின் மூலம் தலை முடி உதிர்வை தடுக்கலாம்.

தேங்காய் எண்ணெய், விளகெண்ணெய்,  நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதனை ஒன்றாக கலந்து தலையில் மசாஜ் செய்து பின்பு ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி கொட்டுவது நிற்கும்.

சின்ன வெங்காயத்தை அரைத்து தலைப்பகுதியில் தடவி அரை மணிநேரம் ஊறவைத்து குளித்து வர பொடுகும் அதனால் ஏற்படும் முடி கொட்டுதலும் நிற்கும்.  

செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரை மணிநேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை குளித்து வந்தால் தலை முடி கொட்டுவது நின்று நன்கு பளப்பாக மாறும்.

வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து எடுத்துக் கொண்டு தலையில் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது நின்று முடி நன்கு வளர தொடங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுமா?

தீவிர ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்புக்கான சிகிச்சைக்கு 24/7 கேத் லேப் – ஐ தொடங்கும் ரேலா மருத்துவமனை

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

பால், தேன் மற்றும் இனிப்புகளில் கலப்படத்தை வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments