Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னங்களை அழகாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள் !!

Webdunia
உடல் எடையை குறைக்க பல முறைகளை கையாள்கிறோம். பெரிய கன்னங்கள் மற்றும் இரட்டை தாடைகள் போன்றவற்றை குறைப்பதற்கு அதிக முக்கியத்துவம்  கொடுப்பதில்லை. கன்னங்களை அழகாக வைத்துக் கொள்வதற்கு ஒருசில உடற்பயிற்சிகள் உள்ளன.
 

கன்னங்களை அழகாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டிய பயிற்சிகளில் முதன்மையானது தான் வாயை குவித்தல். உதடுகளை இறுக்கமாக மூடி, 1 நிமிடம்  குவித்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த மாதிரி ஒரு நாளைக்கு குறைந்தது 3 வேளை, 10 நிமிடம் செய்ய வேண்டும். 
 
முகத்தில் உள்ள தசைகளுக்கான சிறந்த பயிற்சி தான் சிரிப்பு. இவ்வாறு வாய் விட்டு நன்கு சிரிக்கும் போது, முகத்தில் உள்ள தசைகள் நீட்சியடைவதால், அது  கன்னங்கள் அழகாக வைத்துக் கொள்ள உதவும். எனவே தினமும் 15 நிமிடம் சிரிப்பு பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
பொதுவாக சூயிங்கம் போட்டால், வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இந்த சூயிங்கம் மெல்லுவது என்பது முகத்திற்கான ஒரு நல்ல பயிற்சியாகும். இதனால் இரட்டை தாடைகளை தவிர்க்கலாம். 
 
நன்கு பெரியதாக இருக்கும் கன்னங்களை குறைக்க இருக்கும் சிறந்த வழிகளுள் கன்னங்களை தூக்குதலும் ஒன்று. அதற்கு முடிந்த அளவில் கன்னங்களை தூக்குங்கள். அதற்காக கையை கொண்டு தூக்காதீர்கள். சிரிப்பதன் மூலம் கன்னங்களை நன்கு தூக்குங்கள்.
 
உதடுகளை குவித்து, 20 நொடிகள் வைத்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 10, 20 முறை செய்து வந்தால், கன்னங்களை  குறைக்கலாம். வாயில் காற்றினை நிரப்பி 2 நிமிடம் கழித்து, பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கன்னங்களை  குறைப்பதோடு, கன்னங்கள் சரியாக இல்லாதவர்களுக்கு கன்னங்கள் சரியான அளவில் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்?

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments