Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொடுகை நீக்க உதவும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (17:09 IST)
பொடுகு: தலை முழுவதும் இரவு வேலையில் அரிப்பு தன்மை ஏற்படும். தலை முடியின் வேர்பகுதி முழுவதும் சிறு சிறு வெண்கடுகு போல் படைபடையாக உதிரும்.


வேப்பம் பூ 50 கிராம், தேங்காய் எண்ணெய் 100 மி.லி. வேப்பம்பூ: பித்தத்தை முற்றிலும் நீக்கும். வேப்பம்பூ ரசம் வேப்பம்பூ துவையல் இன்றும் கூட கிராமக்களில் பயன்படுத்துவார்கள் இதை பயன்படுத்தினால் பித்ததன்மை படிப்படியாக குறையும். பாத எரிச்சலை போக்கும். தலையில் ஏற்படுகின்ற பொடுகு தொல்லையை போக்கும். கிருமி நாசினியாக செயல்படும்.

தேங்காய் எண்ணெய்: கிருமிநாசினியாக செயல்படும், உடலிற்கு குளிர்ச்சி தரும். அதிக சூட்டை தடுக்கும்.

செய்முறை: மிதமான சூட்டில் தேங்காய் எண்ணெய்யை காய்ச்சவும். காய்சியவுடன் இதில் வேப்பம்பூவை போட்டு நன்றாக காய்ச்சவும். தேங்காய் எண்ணெய்யில் வேப்பம்பூ பொரிந்து நறுமணம் வந்தவுடன் எடுத்து வடிகட்டி ஆறவைத்து கொள்ளலாம்.

இதை தினமும் தேய்த்து வாரத்திற்கு ஒரு முறை சீயக்காய் தேய்த்து குளிக்கவும். இவ்வாறு செய்தால் படிப்படியாக பித்தம் கட்டுக்குள் கொண்டு வந்து பித்தத்தினால் ஏற்படுகின்ற இள நரையை போக்கி, பித்தத்தினால் ஏற்படுகின்ற பொடுகு தொல்லையும் நீங்கி விடும்.

எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறில் பஞ்சை நனைத்து தலையில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் பொடுகை நீக்க உதவும்.

வேப்ப எண்ணெய்: தேங்காய் எண்ணெயுடன் வேப்ப எண்ணெய் கலந்து தடவலாம். வேப்ப எண்ணெய்யில் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி உள்ளதால் பொடுகை நீக்க உதவும்.

வெங்காய சாறு: ஃபங்கஸ் கிருமிகளை அழிக்க வெங்காய சாறு பயன்படும். இருப்பினும், வெங்காய சாறு முடி உதிர்வை ஏற்படுத்தக் கூடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

அடுத்த கட்டுரையில்
Show comments