Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளநரை போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவும் சில அற்புத குறிப்புகள் !!

Webdunia
ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடி உதிர்வு ஏற்படலாம். ஆரோக்கியமான கூந்தலுக்கு புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகள்  அவசியம்.


வெங்காயச் சாற்றை தலையில் தேய்த்து, நன்கு மசாஜ் செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தலையை நன்கு அலச வேண்டும். இப்படி வாரத்துக்கு மூன்று முறை தொடர்ந்து ஆறு மாதங்களுக்குச் செய்துவர, பூச்சி வெட்டு மற்றும் பொடுகுத் தொல்லைகள் நீங்கும். முடியின் வேர்கள் வலுவடையும். 
 
கேரட், பச்சைக் காய்கறிகள், மிளகு, எலுமிச்சை, திராட்சை, உலர் பழங்கள், மீன், முட்டை போன்ற உணவுகள் கூந்தலை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
 
கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மைய அரைத்து, அதோடு அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி, ஒரு பதத்துக்கு வந்ததும் இறக்கி  வைத்துக்கொள்ள வேண்டும். நாம் வழக்கமாக தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்த்து வந்தால் முடி உதிர்வது, இளநரை எல்லாம் போன்றவை  சரியாகும்.
 
கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை பிரச்சனை சரியாகும். அவுரி (நீலி), கரிசலாங்கண்ணி (பிருங்காதி) இது  இரண்டையும் சம அளவு எடுத்து, இதைவிட 3 மடங்கு அதிகமாக தேங்காய் எண்ணெய் சேர்த்து பதமாக காய்ச்சி, இதை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் நரை  நீங்கும்.
 
மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமாக காய்ச்சி, தலைக்கு தேய்த்து வர, கூந்தல் நன்கு வளரும், அதோடு நரை போன்ற பிரச்சனைகளையும் தடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments