Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகத்தை பளிச்சிட வாரம் இருமுறை வீட்டிலேயே செய்ய உகந்த அழகு குறிப்புகள் !!

Webdunia
தக்காளி இறந்த சரும அணுக்களை அகற்றி மிகுதியான எண்ணெய்யை இழுத்துக் கொள்கிறது. இரண்டாக வெட்டிய தக்காளியை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.

புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமுள்ள முட்டையின் வெள்ளைக் கரு, சருமத்தை சுத்தம் செய்வதுடன் இறுக்கப்படுத்தும். 
 
முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். வாரம் இருமுறை இதனை செய்யலாம்.
 
முகத்தை ஈரப்பதத்துடன் வைக்க தேன் உதவும். மேலும், முகப்பருக்கள் வராது தடுக்கும். சருமத் துளைகளை திறந்து மிகுதியாக உள்ள எண்ணெய்யை நீக்கிவிடும். தேனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.
 
கற்றாழை சருமத்தை குளிரூட்டும். சருமத் துளைகளை குறைப்பதால் எண்ணெய் சுரப்பது குறையும். கற்றாழை கூழ் எடுத்து சிறிது நேரம் குளிரவைத்து பிறகு முகத்தில் தடவுங்கள். 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.
 
வைட்டமின் சி கொண்ட எலுமிச்சையில் பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை உள்ளது. இதனால் முகத்தில் எண்ணெய் வடிவதை தடுக்க எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சை சாறை நீருடன் கலந்து, பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி 20-30 நிமிடங்கள் விட்டு கழுவி விடவும்.
 
ஓட்ஸ் அதிகப்படியான எண்ணெயை உரிந்து, முகத்தை சுத்தப்படுத்தி, ஈரப்பதத்துடன் வைக்கும். ஓட்ஸை தண்ணீருடன் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments