Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடி உதிர்வதை தடுக்கும் சின்ன வெங்காயம்...!!

Webdunia
தலைமுடி உதிர்வதைத் தடுத்து முடியின் வேரை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதில் சின்ன வெங்காயம் முக்கிய பங்காற்றுகிறது எனலாம். இதற்கு காரணம் சின்ன வெங்காயத்தில் உள்ள சல்ஃபர் என்ற வேதிப் பொருள்தான்.

சின்ன வெங்காயச் சாற்றை தலையில் 5 நிமிடம் மசாஜ் செய்வதனால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. 
 
வெங்காயச் சாறு தயாரிக்கும்போது நறுக்கிய சின்ன வெங்காயத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெங்காயம் நன்கு வெந்து அதிலுள்ள சாறு வெளியேறியவுடன் அந்த நீரை வடிகட்டி ஸ்கால்ப்பில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
 
பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலைமுடியை அலசினால் ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும். கொதிக்கும் தேங்காய் எண்ணெயில் சின்ன வெங்காயச் சாறு கலந்தும் தலையில் தடவலாம்.
 
சூடு ஆறியபின்னர் வெங்காய சாறு கலந்த சுத்தமான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி தலை குளித்து வந்தால் தலைமுடி வேரை வலுப்படுத்தி வளர்ச்சியடையச் செய்கிறது. இதே போல தேனுடன் சின்ன வெங்காயச் சாறு கலந்தும் தலைமுடிக்கு தடவலாம்.

2 வாரங்களில் முடி உதிர்வது குறைந்து 4 வாரத்தில் புதிதாக முடி வளரும். ஆலிவ் எண்ணெயை 15 நிமிடம் தலையில் தேய்த்து பின்னர் வெங்காயச் சாற்றினைக்  கொண்டு மசாஜ் செய்து 10 நிமிடத்துக்குப் பின் ஷாம்பு போட்டு மிதமான சுடுநீரில் தலையை அலசினால் தலைமுடி நன்கு வளரும்.
 
தலைமுடி உதிர்ந்த பிறகு அந்த இடத்தில் மீண்டும் புதிய முடி வளர வேண்டும். அதற்கு சிறிய வெங்காயத்தை மைய அரைத்து அதனை ஒரு பேக் போல தலையில் தடவி வர வேண்டும். ஊற வைத்து தலையை நன்றாக அலசி கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளரும்.
 
அடர்த்தியான முடியை பெறுவதற்கு பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வெங்காய சாறு, தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்றாக கலந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments