Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரும அழகை மேம்படுத்த உதவும் ஜாதிக்காய் !!

Webdunia
கடையில் விற்கும் மற்ற அழகு சாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதைக் காட்டிலும் இந்த இயற்கை மூலப்பொருளை பயன்படுத்தி உங்கள் அழகை மேம்படுத்துவது சருமத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதனால் சருமத்திற்கு சிறந்த சிகிச்சை அளிக்க முடிகிறது.

சருமத்தில் உண்டாகும் நிறமாற்றம் மற்றும் நிறமிழப்பை குறைக்கும் தன்மை ஜாதிக்காய்க்கு உண்டு என்பது இதன் அற்புத நன்மைகளில் ஒன்றாகும். 
 
சருமத்தில் உண்டாகும் கருந்திட்டுகள், நிறமிழப்பு, சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் புறஊதா கதிர்களால் உண்டாகும் கட்டிகள் , ஹார்மோன் மாற்றம், வயது முதிர்வு, மருத்துகளால் உண்டாகும் பக்க விளைவுகள் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் மிகச் சிறந்த தீர்வைத் தருகிறது.
 
ஜாதிக்காய் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது. இதனால் சருமம் சோர்வடையாமல் தடுக்கிறது. மேலும் வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. 
 
ஆர்கானிக் பால் அல்லது தேங்காய் பால் ஜாதிக்காய் தூள் இந்த இரண்டு மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து முகத்திற்கு தடவவும். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்திற்கு மிருதுவான தன்மையை அளிக்க உதவுகிறது. உங்கள் சருமம் அழகாகவும் பொலிவாகும் மாறுகிறது.
 
ஜாதிக்காயில் அன்டி ஆக்சிடென்ட் மற்றும் வயது முதிர்வைத் தடுக்கும் தன்மை உண்டு. மேலும் அணுக்களை சேதப்படுத்தும் கூறுகளுடன் இது போராட உதவுகிறது. 
 
எண்ணெய் சருமத்திற்கு ஜாதிக்காய் பேக் செய்ய தேவையான பொருட்கள்: ஜாதிக்காய் தூள், தேன். செய்முறை: இரண்டு மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து உங்கள் சருமத்தில் தடவவும். பத்து நிமிடங்கள் இந்தக் கலவை உங்கள் முகத்தில் இருக்கட்டும். தேன் மற்றும் ஜாதிக்காய் ஆகிய இரண்டிற்கும் கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது சருமத்தை அழுக்கு மற்றும் கட்டிகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments