Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகத்தை பொலிவு பெறச்செய்யும் தக்காளி ஃபேஸ் பேக்...!

Webdunia
கோடைக்காலத்தில் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் மறைய தக்காளிச்சாற்றை முகத்தில் பூசி வருவதால் தோல் மென்மையடைவதுடன்  குளிர்ச்சியும்   உண்டாகும்.
பழுத்த தக்காளியை பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு  நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.
 
தக்காளிச்சாறு மற்றும் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து  செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
 
ஒரு டீஸ்பூன் தக்காளிச் சாறுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து, பஞ்சில் தோய்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள்  பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள பெரிய துளைகள் சுருங்கி முகம்  பொலிவு பெறும்.
 
நன்கு கனிந்த 2 தக்காளி, 1/2 கப் தயிர் இரண்டையும் ஒன்றாக அரைத்து, முகம், கை, காலில் தினமும் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர,  சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருமை மறையும்.
 
3 டீஸ்பூன் தக்காளிச் சாறு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் மில்க் கிரீம் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போட்டால், முகம் பளிச்சிடும். வாரம் இருமுறை இதுபோன்ற செய்து வர வேண்டும்.
 
2 டீஸ்பூன் தக்காளிச் சாறு, 1 டீஸ்பூன் ஓட்மீல், 1 டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில்  கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முகம் பிரகாசிக்கும்.
 
1 டேபிள்ஸ்பூன் தக்காளிச் சாறுடன் 1 டேபிள்ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர,  சருமத்தின் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments