Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடைக் காலத்தில் சருமத்தில் ஏற்படும் கருமையை போக்கும் டிப்ஸ்..!!

Webdunia
கோடைக் காலத்தில் சருமத்தின் நிறம் கருமையாகி, பொலிவிழந்து காணப்படும். கூடவே பிம்பிள் வர ஆரம்பிக்கும். கோடையில் முருவத்தை முறையாக பராமரித்து வந்தால், சருமத்தின் அழகு பாதுகாக்கப்படும்.
4 டேபிள் ஸ்பூன் பால், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, சருமத்தில் வெயில்படும்  இடத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். இந்த முறையானது எண்ணெய் பசை சருமத்திற்கு சிறந்தது. 
 
1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 3 புதினா இலைகள், சிறிது தயிர் சேர்த்து கலந்து, அதனை நன்கு பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி வட்ட வடிவில் 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அனைத்து அழுக்குகளும்  வெளியேறி, சருமம் கருமை அடைவதை தடுக்கும்.
முகத்தின் கருமையை போக்க அரைத்த அன்னாசி பழம், திராட்சை விதை ஆயில், அரைத்த பப்பாளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
 
முகத்தில் ஏற்படும் பிம்பிளை போக்க 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1  டேபிள் ஸ்பூன் சந்தன தூள், புதினா, துளசி இலைகள் சேர்த்து கலந்து அதனை சருமத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள வெப்பம் நீக்கப்பட்டு, சருமம் பொலிவோடு இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments