Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரும பொலிவை அதிகரிக்க செய்யுமா குங்குமப்பூ...?

Webdunia
குங்குமப்பூவை நம் உடலுக்கு உட்கொள்வதன் மூலம் மற்றும் வெளியில் போசுவது மூலமும் நம் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும். இதில் அதிகப்படியான  இரும்புச்சத்தும், ஆன்டி ஆக்சிடென்ட்டும் நிறைந்திருக்கிறது.

குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவடையும்.

குங்குமப்பூ மற்றும் சர்க்கரை கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்யவேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் வெள்ளையாகும்.
 
மூட்டு வலி உடையோர் குங்குமப் பூ எடுத்துக் கொள்வதன் மூலம் மூட்டு சதை வீக்கங்கள் குறைகின்றது. மூட்டு பலவீனம் நீங்கி, மூட்டுகள் பலமாகிறது. 
 
குங்குமப்பூவை, வெதுவெதுப்பான பாலில் போட்டு, 20 நிமிடம் ஊற வைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவ வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால் சருமத்திற்கு நல்ல நிறம் கிடைக்கும்.
 
கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ கலந்த பாலை குடிப்பதன் மூலம் குழந்தைகளின் வளர்ச்சி எவ்வித குறையும் இல்லாமல் முழுமையடையும். கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலுருந்து பாலில் காய்ந்த குங்குமப்பூவை கலந்து கொடுத்து வந்தால், சிசுவிற்கும், தாய்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
 
குங்குமப்பூ ஆஸ்துமா நோயாளிகளின் நுரையீரலில் உள்ள திசுக்களின் வீக்கத்தினை குறைத்து ரத்த நாளங்களை சீராக செயல்பட வைக்கிறது. இதனால் காற்றுக் குழாய்கள் சீராக  இயங்குகின்றன.
 
பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கூடும். முகம் பிரகாசமடையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான முக்கிய ஊட்ட்சத்துக்கள் எவை எவை?

காதில் தொடர்ச்சியாக இரைச்சலா? என்ன செய்ய வேண்டும்?

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்: மருத்துவர்கள் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments