Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமத்திற்கு பீட்ரூட் எவ்வாறு பயன்தருகிறது தெரியுமா...?

Webdunia
பீட்ரூட் முகப்பருக்களுக்கு எதிராக செயல்படும். சருமத்தில் ஏற்படும் அனைத்து விதமான பாதிப்புகளையும் நீங்கும் சக்தி கொண்டது பீட்ரூட். பீட்ரூட்டை சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

2 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.
 
முகப்பரு, ப்ளாக் ஹெட்ஸ், வைட் ஹெட்ஸ் உள்ள சருமத்திற்கு சிறியளவு பீட்ரூட் சாறுடன், தக்காளி சாறை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் ஊறவிட்டு, கழுவுங்கள். அழுத்தமான கறைகள், முகப்பரு, ப்ளாக் ஹெட்ஸ், வைட் ஹெட்ஸ் ஆகியவை நீங்கும். 
 
சருமம் வறண்டு இருந்தால், மென்மையாகவும் சிலக்கியாகவும் மாற,பீட்ரூட் துண்டுகளோடு, தயிர் சேர்த்து அரைத்து ஒரு பசைபோல செய்து கொள்ளுங்கள்.  அதோடு, தேவைப்பட்டால் பாதாம் எண்ணெய் சிறிது கலந்து முகத்திலும், உடலிலும் தடவி 20 நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம்  செய்யவும்.
 
வாரத்திற்கு இரண்டு முறை பீட்ரூட் சாறுடன், தேன் மற்றும் பால் சேர்த்து முகத்தில் பூசி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள், கண்களைச் சுற்றி ஏற்படும் கரு வளையம் நீங்கி, வயதான தோற்றம் மறையும். பீட்ரூட்டில் உள்ள லிகோபேன் மற்றும் ஸ்காலீன் தோள் தொங்கிப்போவதை தடுத்து, இளமையான தோற்றத்தை  தரும்.
 
மேலும், முகப்பருவை சுற்றி ஏற்பட்டுள்ள புண்களையும், நோய்த் தொற்றையும் குணப்படுத்தும். முகத்தின் துளைகளில் உள்ள அதிக எண்ணெய்யை நீக்கும். மேலும்,  பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சியானது சருமத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments