Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரும ஆரோக்கியத்திற்கு அற்புத பலன் தரும் தயிர் !!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (14:38 IST)
தயிர் சரும ஆரோக்கியத்திற்கும், அழகை பராமரிக்க மிகவும் உதவி செய்கிறது. தயிரில் கொலாஜன் உற்பத்தி செய்யும் புரதம் உள்ளது. இது தோல் நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்துகிறது.


தயிரில் ஏராளமான சத்துக்கள் உள்ளதால் இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால் சரும பிரச்சனை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மாறும் அந்த வகையில் தயிரைப் பயன்படுத்தி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க அதிகரிக்க செய்வது மற்றும் சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது எப்படி என பார்க்கலாம்.

ஒரு பவுலில் தயிர், கடலை மாவு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் அனைத்திலும் ஒரு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு அனைத்தையும் ஒன்றாக கலந்து சருமத்தின் மேல் தடவவும் பின்னர் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவுவோம்.

அரை கப் தயிர் எடுத்துக் கொண்டு அவற்றில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் தடவினால் உடல் உஷ்ணத்தால் வறட்சி அடைந்த சருமம் மிகவும் பொலிவுடன் காணப்படும்.

ஒரு துண்டு வெள்ளரிக்காயை, 2 ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் ஓட்ஸ் அல்லது கடலைமாவு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து ஒருமுறை அரைத்து பின் சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.

தயிரின் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் பண்புகள் வீக்கமடைந்த பகுதியை இனிமையாக்குவதன் மூலம் தோல் எரிச்சலுக்கு சிகிச்சையளிக்கலாம். பாதிக்கப்பட்ட அல்லது உடைந்த தோலுக்கு தயிர் பயன்படுத்த வேண்டாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments