Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை போக்க உதவும் வெள்ளரிக்காய் !!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (18:01 IST)
சரும பிரச்சனையை போக்குவதற்கு, எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து சரும அழகை மேம்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம். சருமத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது அந்த பிரச்சனை என்னவென்றால் சருமம் மிகவும் வறண்டு சோர்வுற்ற நிலையிலும் மற்றும் வெடிப்புடன் காணப்படுகின்றது.


வெள்ளரிக்காய் மற்றும் உருளைக் கிழங்கை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து அதன் சாற்றை எடுத்துக் கொள்ளவும் அதை முகத்தில் தடவிக்   சிறிது நேரம் வைத்திருந்து கழுவிக் கொள்ளுங்கள் இதனால் உங்கள் சரும அழகை மேம்படுத்தலாம்.

வெள்ளரிக்காய் சாறு மற்றும் தக்காளி சாற்றினை சரிசம அளவில் எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகம், கை, கால், கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமானால், இத்துடன் முல்தானி மெட்டி பவுடரையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் எடுத்து சற்று அரைத்துக் கொள்ளவும் பிறகு அதனுடன் தேவையான அளவு பால் பவுடரை அதனுடன் கலந்து கொள்ளுங்கள். இதை முகத்தில் தடவி வர முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள்  மறையும். குறிப்பு 3 புதினா இலைகள் மற்றும் வெள்ளரிக்காயை மிக்சியில்  பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள் வாரம் இருமுறை என முகத்தில் தடவி  சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவி வாருங்கள் இதனால் முகத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும்  மற்றும் கரும்புள்ளிகளை நீக்கும்.

2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments