Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள உதவும் வாழைப்பழ ஃபேஸ் பேக் !!

Webdunia
வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் சருமம் இளமையாகத் தோற்றமளிக்கும். 

1. முதுமையைத் தடுப்பதற்கு பேஸ் மாஸ்க்காக வாழைப்பழத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம். வாழைப்பழத்துடன் பால் கலந்து பேஷியல் கிரீம் தயாரிப்பது பற்றி பார்ப்போம்.
 
வாழைப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக பிசைய வேண்டும். பின்னர் ஒரு டேபிள்ஸ்பூன் பாலை ஊற்றி நன்றாக பிசைய வேண்டும். அதனை கையில் எடுத்து முகம், கழுத்துப் பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு அவை உலரும் வரை  வைத்திருக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
 
இதனை வாரத்திற்கு இரண்டு முறை முகத்தில் தடவி வரலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.
 
2. முகத்திலோ முகப்பரு உள்ள பகுதிகளிலோ வாழைப்பழத் தோலின் உட்பகுதியை வைத்துத் தேய்த்தால் போதும். அழற்சியைக் குறைக்கிறது. பிசைந்த வாழைப்பழத்துடன் மஞ்சள் பொடி, தேன் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்தும் பேஸ் மாஸ்க் போடலாம். அது முகப்பருக்களை ஒழிப்பது மட்டுமின்றி, சருமத்திற்கும்  இயற்கையான பளபளப்பையும் பொலிவையும் கொடுக்கும்.
 
3. கரும்புள்ளிகளின்மீது வாழைப்பழத் தோலைத் தேய்த்தால் அல்லது பிசைந்த வாழைப்பழத்தையே தேய்த்தால் வயதாவதால் தோன்றும் புள்ளிகளும்,  கரும்புள்ளிகளும், முகப்பரு வடுக்களும் குறைகின்றன. விரைவில் பலன் பெற, இதை குறைந்தது வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments