Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த

இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த

Webdunia
மனிதனுக்கு மரணவாயிலை திறக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோயும் உள்ளது. சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க இயற்கையான வழிமுறைகள் சில உள்ளன.


 


மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், இயற்கை வழிமுறைகளில் சர்க்கரை நோயை விலக்கி வைத்திருப்பது எளிதான செயலாகும்.
 
உங்களுடைய உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், அது தொடர்பான வேறு சில பிரச்சனைகளுக்கும் ஆளாகிட நேரிடும். சாப்பிடும் உணவு மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சி ஆகியவை இரண்டும் நீரிழிவு நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நம்ப வேண்டிய இரண்டு வழிமுறைகளாகும். 
 
பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்த்து விட்டு, இயற்கையான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டியதும் அவசியமாகும்.
 
1. நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட் டால் சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.
 
2. நீரிழிவுக்கு உணவுக்குத்தான் முதலிடம். மற்றவை எப்படி அமைய வேண்டும் என்பதை உணவே தீர்மானிக்கிறது. உணவுக் கட்டுப்பாடு, மருத்துவம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் சேர்ந்துதான் நீரிழிவு நோய் மிகாமல், அதன் தாக்கத்தை அதிகப்படுத்தாமல் தடுக்கின்றன.
 
3. முட்டைக்கோஸ்,கலோரிகள் குறைவாக மற்றும் நார் சத்து அதிகமாக உள்ளது, எனவே அது நீரிழிவுக்கு தேர்வு செய்ய ஒரு சிறந்த காய்கறி ஆகிறது. இரத்த சர்க்கரையை கட்டுபடுத்துகிறது. இது நீரிழிவுக்கு ஒரு மருந்தாகும்  ஆன்டியாக்சிடென்ட் மற்றும் ஹைப்பர்க்ளைசிமிக் எதிர்ப்பு பண்புகள் நிறைய உள்ளது.
 
4. சீத்தாப்பழத்தை தினமும் சிறிய அளவுகளில் சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. அதிக அளவு வைட்டமின் சி உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விரும்பினால், உடலிலுள்ள வைட்டமின் சி சத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் இன்சுலின் தேவையை கட்டுப்படுத்த முடியும்.
 
5. சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

HMPV வைரஸ் சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்

சிறுநீர்ப்பை புற்றுநோயை தடுக்க புதிய சிகிச்சை.!

ஸ்பூனில் சாப்பிடுவதை விட கையால் சாப்பிடுவது சிறந்தது.. எப்படி தெரியுமா?

தூக்கத்தின்போது நள்ளிரவில் விழிப்பு வருகிறதா? என்ன செய்ய வேண்டும்?

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் தோல் சார்ந்த பிரச்சனை.. தீர்வு என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments