Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணெய் வடியும் முகமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (14:05 IST)
உங்களது சருமம் எந்த மாதிரியான சருமம் என்பதை கண்பிடித்து அதற்கு ஏற்றமாதிரி அதனை பாதுகாக்க வேண்டும். பெரும்பாலும், எண்ணெய் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய சருமம் என்று நான்கு வகைகளாக பிரித்துக்கொள்ளலாம்.
 
எண்ணெய் சருமத்தை பெற்றவர்களுக்கு எப்போதும் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு காணப்படும். இதை தவிர்க்க பின்வரும் சிலவற்றை பின்பற்றுங்கள்... 
 
# தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறையும். 
 
# முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். அதிலும், தினமும் மூன்று முறை குளிர்ந்த நீரைக்கொண்டு சுத்தம் செய்வது நல்ல பலனளிக்கும். 
 
# வெள்ளரிக்காயை முகத்தில் தேய்த்து வர, முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதைத் தவிர்க்கலாம்.
 
# வெள்ளரிச்சாறுடன், பால் பவுடர் கலந்து பயன்படுத்தலாம். தக்காளி சாறு எடுத்தும் பயன்படுத்தலாம்.
 
# பால் மற்றும் முட்டையின் வெள்ளைப் பகுதி, கேரட் துருவல் கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.
 
# சோளத்தை நன்கு பொடி செய்து, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், எண்ணெய் பசை நீங்கும்.
 

தொடர்புடைய செய்திகள்

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments