Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையின் அழுகையை எளிதில் நிறுத்துவது எப்படி?

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (19:53 IST)
பெரும்பாலான தாய்மார்களுக்கு குழந்தையின் அழுகையை நிறுத்துவது என்பது பெரும் சவாலான காரியமாக இருக்கும். குறிப்பாக வெளியே எங்கேயாவது சென்று இருக்கும்போது திடீரென குழந்தை அழுதால் அந்த குழந்தையின் அழுகையை நிறுத்துவது எப்படி என்று தெரியாமல் தாய்மார்கள் திணறுவார்கள்,
 
பிறந்த ஆறு வாரங்கள் வரை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் குழந்தை அழுவது இயல்பான ஒன்றுதான். குழந்தைகளுக்கு தன்னுடைய உடலில் இருக்கும் கோளாறு என்ன என்று சொல்லத் தெரியாது என்பதால் எந்த கோளாறு ஏற்பட்டாலும் உடனே அழுகத்தான் செய்யும்.
 
பசி, சோர்வு, வயிற்றுவலி, வாயு தொல்லை, டயப்பர் ஈரமாவது, அதிக குளிர்ச்சி, அதிக வெப்பம் போன்ற பல காரணங்களால் குழந்தைகள் அழும். எனவே குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கண்டுபிடித்து அதனை உடனடியாக சரி செய்தால் குழந்தையின் அழுகை உடனே நின்று விடும்.
 
 குழந்தை தொடையை வயிற்றில் மடித்து வைத்தபடி அழுதால் வயிற்று வலி என்று அர்த்தம்.  அதிகப்படியான காற்று குழந்தைகள் வயிற்றுக்கு சென்றாலும் குழந்தை அழும், எனவே பாலூட்டியவுடன் குழந்தையை தோளில் சாய்த்தவாறு லேசாக தட்டிக் கொடுத்தால் காற்று வெளியேறிவிடும்.  
 
குழந்தை அழும்போது தாய் தன் விரலை நன்றாக சுத்தம் செய்து குழந்தையின் வாயில் வைக்க வேண்டும். குழந்தை விரலை சூப்பதொடங்கினால் பசியால் அழுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் கல்பவிருக்‌ஷா வருடாந்திர கண் மருத்துவவியல் கல்வி பயிலரங்கின் 17-வது பதிப்பு!

சிறுகீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments