Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பொடுகை விரட்டுவது எப்படி?

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (17:37 IST)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பொடுகு பிரச்சனையை போக்க சில எளிய டிப்ஸ் இதோ... 

 
தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து சிறிது நேரம் கழித்து விதமான நீரில் தலையை அலசினால் பொடுகு  மறைந்துவிடும்.
 
தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனை நீங்கும்.
 
வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு  தொல்லை நீங்கும்.
 
தயிர் முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.
 
தலைக்கு குளிக்கும்போது கடைசியாக குளிக்கும் தண்ணீரில் வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.
 
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
 
மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
 
வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுநீரக கற்கள் உருவாகுவதை எப்படி தடுப்பது?

பித்தப்பை கற்கள் உருவாகுவது ஏன்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments