Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்கறி மற்றும் கீரைகளின் சத்துக்கள் அழியாமல் சமைப்பது எப்படி

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (20:41 IST)
சமையல் அறையில் நடக்கும் சில சின்னச் சின்னத் தவறுகளைத் தவிர்த்தால், உயிர்ச் சத்துக்களைக் கெடாமல் மீட்டு வியாதிகளைக் குறைக்கலாம்.


 

 
1. காய்கறி, கீரைகளைச் சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கழுவவும். பூச்சிக் கொல்லி மருந்துகளின் விஷம் நீங்கும். 
 
2. கழுவியபின் நறுக்கவும். நறுக்கியபின் கழுவினால் சத்துக்கள் நீங்கி விடும். நறுக்கும் போது பெரிய துண்டுகளாக நறுக்கவும். 
 
3. வறுத்தல், பொரித்தல், எண்ணெயில் வேக வைத்தல் முதலிய முறைகள் வேண்டாம். அவை சீரணத்தைக் கெடுக்கும். நாவுக்குச் சுவை. உடல் நலத்திற்க்குக் கேடு. 
 
4. வெண்டைக்காய், கேரட், வெள்ளரிக்காய் முதலியவற்றைச் சமைக்காமல் பச்சையாகவே சாப்பிடலாம். 
 
5. கீரைகளைச் சிறிது நேரமே வேக வைக்க வேண்டும். 
 
6. கீரைகளைச் சமைப்பதற்குக் குறைந்த அளவு நீரையே பயன்படுத்த வேண்டும். 
 
7. பச்சைக் கீரைகளை அதிக நேரம் வதக்க வேண்டாம். 
 
8. கீரைகள் சமைத்த நீரை கீழே ஊற்றாமல் சாம்பார், ரசம், சூப்பு முதலியவற்றிலும், மாவு பிசையவும் பயன்படுத்தலாம். 
 
9. கீரைகளை மூடப்பட்ட பாத்திரத்தில் வைத்துச் சமைக்கவும். 
 
10. பீர்க்கன்காய், செளசெள போன்ற சில காய்களில் தோலை வீணாக்காமல் துவையலுக்குப் பயன்படுத்தலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுமா?

தீவிர ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்புக்கான சிகிச்சைக்கு 24/7 கேத் லேப் – ஐ தொடங்கும் ரேலா மருத்துவமனை

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

பால், தேன் மற்றும் இனிப்புகளில் கலப்படத்தை வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments