Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்சியத்தை ஈடுகட்டும் சத்தான உணவு வகைகள் எவை தெரியுமா...!

Webdunia
மூட்டுவலி, முதுகுவலி போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் உருவாகுவதற்கு கால்சிய சத்து குறைபாடு முக்கிய காரணமாக அமைகிறது. அதிலும் பெண்கள் கால்சிய சத்து குறைபாடு பிரச்சினையால் அதிகம் அவதிப்படுகிறார்கள். கால்சியம் சத்தை ஈடுகட்ட சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியமாகிறது.

 
கால்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியமாகிறது. எனவே கால்சியத்துடன், வைட்டமின் டி  உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
 
தினமும் பால் பருகி வருவதன் மூலம் கால்சியம் சத்தை தக்கவைத்து கொள்ளலாம். சோயா பால் பருகி வருவதும் நல்லது. 100  மி.லி. சோயா பாலில் 120 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது.
 
பாதாமிலும் 80 சதவீதம் அளவுக்கு கால்சியம் நிறைந்துள்ளது. காலை உணவுடன் ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் பருகி வருவதும் நல்லது. அதில் வைட்டமின் சி மட்டுமின்றி கால்சியமும் அதிக அளவில் நிறைந்திருக் கிறது. இது தினமும் உடலுக்கு தேவையான கால்சியத்தின் அளவை ஈடு செய்யும்.
 
அத்தி பழத்தில் கால்சியம் மட்டுமின்றி பெண்களுக்கு தேவையான மற்றொரு ஊட்டச்சத்தான இரும்பு சத்தும் நிரம்பியிருக்கிறது.  செரிமானம் சீராக நடைபெறவும் இது உதவும்.
 
பால் பொருட்களைத் தவிர, கால்சியம் சத்தானது பச்சை இலைக் காய்கறிகளில் நிறைந்துள்ளது. அதிலும் பசலைக் கீரை,  ப்ராக்கோலி போன்றவற்றை அளவுக்கு அதிமான அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
 
கேழ்வரகில் அரிசியை விட 30 மடங்கு கால்சியம் நிறைந்திருக்கிறது. ராகி மால்ட், கேழ்வரகு தோசை, ரொட்டி போன்றவை தயாரித்து சாப்பிட்டு வரலாம். அவை கால்சியத்தின் அளவை அதிகப் படுத்தும்.
 
காராமணியில் கால்சியம் அதிகம் இருக்கிறது. சூப்பாகவோ, சாலட்டுகளில் சேர்த்தோ, வேகவைத்தோ சாப்பிட்டு வரலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

பசித்த பின் புசி.. பசிக்காமல் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..

சிவனின் அருளைப் பெற உதவும் சிவ நமஸ்காரம் எனும் அற்புத யோகப் பயிற்சி!

வெரிகோஸ் வெயின் நோய் யாருக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பு?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments