Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முளைக்கட்டிய கொள்ளு எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (00:01 IST)
தினமும் காலையில் முளைக்கட்டிய கொள்ளு எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!
 
புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரி பார்க்கவும் புரதம் மிக  அவசியம்.
 
கொள்ளுத் தண்ணீர் இரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி  செய்வோருக்கும் மிகவும் உகந்தது. 
 
பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்சனைக்கு, இருமல் மற்றும் சளியை  விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த என பல்வேறு பிரச்சனைகளை கொள்ளு நிவர்த்தி செய்கிறது.
 
தினமும் காலையில் மற்ற எந்த உணவை சாப்பிடுவதற்கு முன்பாக வெறும் வயிற்றில் முளைவிட்ட கொள்ளு அல்லது கொள்ளை கொண்டு செய்யப்பட்ட சூப்  அருந்துவதால் மேற்கூறிய செரிமான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
 
அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும் கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம்  சொல்கிறது. 
 
சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேகவைத்த தண்ணீரில் சூப் அருந்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு  கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். மட்டுமின்றி, கொள்ளை வேகவைத்து மசித்து, சருமப் பிரச்சனைகளுக்குத் தடவுகிறார்கள்.
 
கொள்ளு தானியங்களில் அதிக அளவில் இரும்புச்சத்து இருக்கின்றன. இது பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதீத ரத்தப்போக்கு ஏற்படுவதால் உடல் இழந்த சத்துக்களை ஈடு செய்கிறது. மாதவிடாய் ஏற்படும் போது உண்டாகும் அதிக எரிச்சல் மற்றும் வலியையும் குறைக்கிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்பூனில் சாப்பிடுவதை விட கையால் சாப்பிடுவது சிறந்தது.. எப்படி தெரியுமா?

தூக்கத்தின்போது நள்ளிரவில் விழிப்பு வருகிறதா? என்ன செய்ய வேண்டும்?

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் தோல் சார்ந்த பிரச்சனை.. தீர்வு என்ன?

உலர் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

HMPV தொற்று கர்ப்பிணிகளை பாதிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments