Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்பாளி இலை சாற்றின் பயன்கள்...

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (00:34 IST)
பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.
 
வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனை, ஒவ்வாமை, அலர்ஜி போன்ற சரும பிரச்சனை, ஒழுங்கற்ற மாத விடாய் சுழற்சி, நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பல  பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது.
 
பப்பாளி இலையை நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து தைலம் போல் காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணெய்யை தினமும் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். இந்த எண்ணெய்யை கட்டி மேல் தடவினால் கட்டி உடையும். வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும். காயம்  பட்ட இடத்தில் பூசினால் காயங்களுக்கு விரைந்து குணம் கிடைக்கும்.
 
படர் தாமரை என்று உடல் இடுக்குகளில் ஏற்படும் தோல் பிரச்னைக்கும் பப்பாளி இலையை அரைத்து பூசினால் நல்ல குணம் கிடைக்கும்.
 
பிளேட்டுலெட்டுகள் வெகுவாக குறைவதாலேயே பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே, டெங்கு  பாதிக்கப்பட்டவர்களுக்கு  பிளேட்டுலெட்டுகள்  எண்ணிக்கை அதிகரிக்க செய்வது மிக அவசியம். அதற்கு சிறந்த தீர்வு பப்பாளி இலைச்சாறு என்று ஆய்வில் கூறப்படுகிறது.
 
காய்ச்சல் போன்ற நோய் ஏற்பட்ட காலங்களில் இந்த சாற்றை ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் சாப்பிடவேண்டும். அதிலும் ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை ஒரு டேபிள் ஸ்பூன் பருகவேண்டும். இது பிளேட்டுலெட்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதுடன்  வெள்ளை அணுக்களையும் அதிகரிக்கும்.
 
தினமும் நாம் பப்பாளி இலைச் சாற்றினை சிறிய அளவில் குடித்து வந்தால், அது நமது உடம்பின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்து, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை தடுக்கும்.
 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments