Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாழை இலையில் சாப்பிடுவது இவ்வளவு நன்மையா?

வாழை இலையில் சாப்பிடுவது இவ்வளவு நன்மையா?
, வெள்ளி, 13 அக்டோபர் 2023 (18:22 IST)
வாழை இலையில் சாப்பிடுவது என்பதை நமது முன்னோர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கடைபிடித்து வந்தனர். ஆனால் தற்போதைய நவநாகரீக உலகில் வாழை இலை என்பதையே பொதுமக்கள் மறந்துவிட்டனர். அலங்கார தட்டுகளில் தான் தற்போது உணவுகள் சாப்பிட்டு வருகின்றனர்.

ஆனால் வாழை இலையில் சாப்பிட்டால் ஏராளமான பலன்கள் உண்டு என்பது முன்னோர்களின் கருத்தாக உள்ளது. வாழை இலையின் மேல் உள்ள பச்சை தன்மை உணவை எளிதில் ஜீரணம் ஆக்கும் தன்மை உடையது என்றும் வயிற்றுப்புண் உள்ளிட்டவற்றை ஆற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி வாழை இலையில் சாப்பிட்டால் நன்றாக பசியை தூண்டும்  நோயின்றி நீண்ட நாள் வாழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது. வாழை இலையில் விருந்தோம்பல் செய்வது என்பது தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரமாக உள்ளது

வாழை இலையில் சாப்பிட்டால் நீண்ட ஆயுளுடன் இருக்கலாம் என்றும் தோல் நோய்கள் வராமல் தடுக்கப்படும் என்றும் ரத்தம் சுத்திகரிக்கப்படும் என்றும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் என்றும் சிறுநீர் தொடர்பான எந்த நோயும் வராது என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி வாழை இலையில் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெருங்கிவிட்டது மழைக்காலம்.. இருமல் சளி தொல்லையில் இருந்து தப்பிப்பது எப்படி?