Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை குளிக்க வைப்பதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றதா?

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (20:30 IST)
குழந்தைகள் வளர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய கலை என்றும் அந்த கலையை ஒரு தாய் விருப்பத்துடன் செய்யும்போது அந்த குழந்தையின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுவது உண்டு.

குறிப்பாக குழந்தைகளை குளிக்க வைப்பது என்பது ஒரு முக்கிய வேலையாக இருக்கும். தினமும் குளிக்க வைக்க வேண்டுமா? அதிலும் தலைக்கு குளிக்க வைக்க வேண்டுமா? குழந்தைகளை அதிக நேரம் குளிக்க வைத்தால் நல்லதா? என்பது போன்ற பல சந்தேகங்கள் இருக்கும்.

மழை மற்றும் குளிர்காலங்களில் குழந்தையை தினமும் குளிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குழந்தைகளின் சருமம் தாங்கும் அளவிற்கு சூடான நீரில் இரண்டு நாட்கள் ஒருமுறை குளித்தால் போதும்.

வெதுவெதுப்பாக தண்ணீர் உள்ளதா என்பதை சோதனை செய்து கொள்ள வேண்டும். முதலில் குழந்தைகளின் காலில் ஊற்றி குழந்தை தாங்கும் அளவுக்கு சூடு சரியாக இருக்கிறதா என்பதை சோதனை செய்ய வேண்டும்

அதிக நேரம் குளிக்க வைத்தால் நன்றாக தூக்கம் வரும் என்று கூறப்படுவது உண்மை இல்லை. எந்த மாத குழந்தையாக இருந்தாலும் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் குளித்தால் போதுமானது. குளிர் காலத்தில் மட்டுமல்ல வெயில் காலத்தில் கூட குளிர்ந்த நீரை பயன்படுத்த வேண்டாம்.

வெதுவெதுப்பான நீரை மட்டுமே குளிப்பதற்கு பயன்படுத்த வேண்டும். சோப்பு அல்லது ஷாம்பு பயன்படுத்தலாம் அல்லது கடலை மாவு பயன்படுத்தி குழந்தைகளை குளிக்க வைக்கலாம்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments