யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள்

Webdunia
திங்கள், 8 ஜூன் 2009 (12:08 IST)
கொசு‌க்களா‌ல் பரவு‌ம் யானை‌க்கா‌ல் நோயை‌க் க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் ‌விதமாக சென்னையில் 3 லட்சம் பொதுமக்களுக்கு இலவசமாக யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை வழங்கப்பட ்‌டு‌ளளன.

சென்னையின் 10 மண்டலங்களிலும் யானைக்கால் நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் மாத்திரைகள் வழங்கும் பணியினை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அத‌ன்படி, சைதாப்பேட்டை நாகிரெட்டித் தோட்டம் குடிசைப்பகுதி மக்களுக்கு மாத்திரைகள் வழங்கினார்.

மேயர் மா.சுப்பிரமணியன் யானைக்கால் தடுப்பு நோய்க்கான மாத்திரைகளை சாப்பிட்டார் பின்னர் மற்றவர்களுக்கு வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இது குறித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறுகை‌யி‌ல், சென்னை மாநகராட்சி சார்பில் 3 லட்சம் பொதுமக்களுக்கு யானைக்கால் நோய்த்தடுப்பு மாத்திரைகள் வீடுவீடாக சென்று இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பணிகளுக்காக சென்னை மாநகராட்சியில் 2000 சுகாதாரப் பணியாளர்கள், 43 மருத்துவர்கள், 10 உதவி சுகாதார அலுவலர்கள், 112 சுகாதார ஆய்வாளர்கள், 10 பூச்சியல் வல்லுநர்கள், 20 துப்புரவு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் அனைத்து மருந்தகங்களிலும், தாய்சேய் நல மருத்துவமனைகளிலும் இலவசமாக யானைக்கால் நோய்த்தடுப்பு மற்றும் உடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள 155 வட்டங்களில் 63 வட்டங்களுக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்த 63 வட்டங்கள் நீர்வழித்தடங்களில் ஓரங்களில் உள்ள பொதுமக்களுக்கு யானைக்கால் நோய் வராமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைக்காக வழங்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி மருந்தகங்கள், மருத்துவமனைகளில் சக்கரை நோய் கண்டறிவதற்கான கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இருதய நோய் கண்டறிவதற்கான கருவிகள் மாநகராட்சி மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தனியார் மருத்துவமனையை காட்டிலும் சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பொதுமக்கள் பயன் அடைந்திட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் துரித நடவடிக்கை காரணமாக மாநகராட்சி மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் 15 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின் றது எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராட்சைப் பழத்தின் வியக்கவைக்கும் மருத்துவ குணங்களும் உடல்நலப் பயன்களும்

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? எந்தவிதமான சிகிச்சை எடுக்க வேண்டும்?

10ல் 1 குழந்தைக்கு உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறதா? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா? என்ன ஆபத்து?

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

Show comments