Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று உலக தொப்பையர் தினம்

இன்று உலக தொப்பையர் தினம்

Ashok

, திங்கள், 26 அக்டோபர் 2015 (16:48 IST)
இன்று உலக தொப்பையர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் தொப்பை மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களை பாதிக்கும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


 

தொப்பையால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தொப்பை தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தொப்பையால் சர்க்கரை நோய் (டயபட்டிஸ் 2), உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், அசிடிட்டி, இளம் வயதில் இருதய நோய்கள், பித்தப்பை கற்கள் உள்ளிட்ட நோய்களுடன் இன்னும் பல நோய்களும் சர்வ சாதாரணமாக ஏற்படுகின்றன.

webdunia

 

இவை குறித்து மும்பை டாக்டர் மோகன் தேசாய் கூறுகையில், உடல் பருமன் அதிகம் கொண்டவர்களுக்கு இடுப்பு, மூட்டு மற்றும் தோள்பட்டைகளில் அதிக வலி ஏற்படும். எடைகளை தூக்குவதற்கு அழுத்தம் கொடுக்கப்படும் இந்த எலும்பு சேர்க்கை பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

 
உடல் எடை அதிகம் கொண்டவர்களுக்கு ஹார்மோன் நிலைத்தன்மை ஏற்படுவதால் மலட்டுத்தன்மை ஏற்படுமாம். தலைமுடி உதிர்தலில் துவங்கி .................
                                                                                                           மேலும் படிக்க அடுத்தப்பக்கம் பார்க்க............

புற்றுநோய் வரை ஏற்படுமாம். மார்பக புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், கர்ப்பபை புற்றுநோய், குடல் புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய் போன்ற சில வகை புற்றுநோய்களும் ஏற்படுமாம்.


webdunia

 

 
இது தவிர உடல் எடை அதிகம் கொண்டவர்களுக்கு சாதாரணமாக ஏற்படக் கூடிய பிரச்னை தூங்கும் போது மூச்சுத்திணறல் ஏற்படுவதாகும். இது தீவிரமாகும் போது மாரடைப்பை ஏற்படுத்தும். உடல் பருமனால் எளிதில் கண்டறிய முடியாத நோய்கள் பலவும் வர வாய்ப்பு இருப்பதாகவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

webdunia

 

நோய்கள் மற்றும் அதனால் ஏற்படும் தீவிரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தொப்பை தினம் கொண்டு வந்திருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகையால், தொப்பை மனிதர்களே கொஞ்சம் உஷார்...

Share this Story:

Follow Webdunia tamil