Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கண் இமைகளை கவனத்துடன் காப்பது எப்படி?

கண் இமைகளை கவனத்துடன் காப்பது எப்படி?
, வியாழன், 30 மார்ச் 2017 (02:06 IST)
கண்ணை இமை காப்பது போல் காக்க வேண்டும் என்று தமிழில் ஒரு பழமொழியே உண்டு. இமைகளை பராமரிப்பதில் நம்மவர்கள் ஏற்கனவே சிறந்தவர்கள். குறிப்பாக பெண்கள் இமையின் அழகை மெருகேற்றுவதில் சிறந்தவர்கள். கண்ணின் இமையை எப்படி காப்பது என்பதை பார்ப்போமா!



 


1. இமைகளை குளிர்ச்சியாக வைத்திருப்பது மிக முக்கியம். இதற்காக ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்வதற்கு முன், ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை கண் இமை முடிகளில் தடவி வந்தால் இமைகள் குளிர்ச்சி அடையும்

2. இமை முடிகள் வளர என்ன செய்ய வேண்டும் தெரியுமா? எலுமிச்சையின் தோல்களைச் சீவி, அவற்றை ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். அந்த எண்ணெயை, கண் இமை முடிகளில் தொடர்ந்து தடவி வர, இமை முடிகளின் வளர்ச்சி சீராகும்.

3. இமைகளின் மேல் ரசாயனங்கள் நிறைந்த அழகு சாதனங்களை பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இயற்கைமுறையில் தயாரிக்கப்பட்ட கண் மைகளையே பயன்படுத்த வேண்டும். இரவில் படுக்கச் செல்வதற்கு முன்பு கண்மையை அகற்றிவிட வேண்டும் என்பது முக்கியமானது.

4. குளிர்விக்கப்பட்ட கிரீன் டீயை பஞ்சில் தோய்த்து கண் இமைகளின் மேல் 10 நிமிடங்கள் வரை வைக்கலாம். இதில் இருக்கும் ஃப்ளேவனாய்டு, இமை முடியின் ஆரோக்கியத்தைத் தக்கவைப்பதுடன் வளர்ச்சியைத் தூண்டும்.

5. ஒருசிலர் இமை கர்லரை பயன்படுத்துவது உண்டு. ஆனால் கண் இமைகளில் ‘கர்லர்’ (Curler) பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே கண் டாக்டர்களின் பரிந்துரை. இதனால், கண் இமை முடிகள் பாதிக்கப்படலாம். அவசியமெனில், மாதத்துக்கு ஒரு தடவை மட்டும் கர்லர் பயன்படுத்துங்கள்.

6. கண்களை மூடிக்கொண்டு, இமைகளின் மேல் மென்மையாக அழுத்தம் தர வேண்டும். இதனால், கண்களில் ரத்த ஓட்டம் சீரடையும். இமை முடிகளின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

7. இமைகளின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் சி, இ, தயாமின், நியாசின் உள்ளிட்ட பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவும், நம் கண் இமை முடிகளின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு ஆற்றும்.

8. தூங்கச் செல்வதற்கு முன்பு இமை முடி மீது ஃபிரெஷ் கொண்டு கற்றாழை ஜெல்லைத் தடவலாம். கற்றாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் இமை முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன் வலிமையானதாகவும் மாற்றுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?