Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிராக்களில் இத்தனை வகைகளா? பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்

பிராக்களில் இத்தனை வகைகளா? பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்
, செவ்வாய், 30 மே 2017 (01:04 IST)
பெண்கள் அணியும் பிரா என்பது சாதாரணமாக மார்பை தாங்கி பிடிக்கும் ஒரு உடை என்ற அளவில் மட்டுமே பலர் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு பிரிவினர்களுக்கும் என தனித்தனியாக பிரா மார்க்கெட்டில் வந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து தற்போது பார்ப்போம்



டீசர்ட் பிரா: தையல் இல்லாமல் டீசர்ட் போன்று அமைந்திருக்கும் இந்த பிராவை அப்படியே கழுத்து வழியே அணிந்து கொள்ளலாம். பிரா கொக்கியை சரியாக போட்டோமா, திடீரென முக்கியமான நேரத்தில் கொக்கி அவிழ்ந்து தர்ம சங்கடத்தை ஏற்படுத்துமா என்ற கவலை இல்லை.

டீன் ஏஜ் பிரா: 13 முதல் 19 வயது வரையிலான இளம்பெண்களுக்கு என்றே தயாரிக்கப்பட்டது இந்த பிரா. இந்த வயதில் பெண்களின் மார்புப்பகுதி நாளுக்கு நாள் வளர்ச்சி அடையும் என்பதால் இந்த வகை பிரா மார்பை இறுக்காமல் அதில் உள்ள எலாஸ்டிக் நெகிழ்ந்து கொடுத்து அளவுக்கு தகுந்தவாறு மாறிக்கொள்ளும்

நாவல்டி பிரா: திருமண நாளில் கிட்டத்தட்ட அனைத்து பெண்களும் அணியும் பிரா இதுதான்.  பேப்ரிக், லெதர், லேஸ், சாட்டின் என பலவிதங்களில் கிடைக்கும் இந்த பிராவை அணியும் பெண்கள் திருமணத்தன்று கசகசப்பு இல்லாமல் மென்மையான உணர்வை அனுபவிக்கலாம்.

நர்சிங் பிரா: இந்த வகை பிராக்கள் கைக்குழந்தைகள் வைத்திருப்பவர்கள் அணிந்து கொள்ளலாம். குழந்தைக்கு பால் கொடுக்கும்போது கஷ்டப்படாமல் கப்பில் உள்ள கொக்கியை மட்டும் நீக்கி குழந்தைக்கு பால் கொடுக்க வசதியாக இருக்கும்.

இன்னும் இதேபோல் சுமார் இருபது வகை பிராக்கள் உள்ளது. வரும் நாட்களில் அந்த பிராக்கள் குறித்து பார்ப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொது இடத்தில் செக்ஸ்: இந்தியாவின் பண்டைய செக்ஸ் விளையாட்டு