Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாக் அளிக்கும் ஜியோவின் புதிய அறிவிப்புகள்

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (13:05 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பியூச்சர் போனை பெறும் வாடிக்கையாளர்களுக்கான விதிமுறைகளை ஜியோ நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளது.


 

 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஜியோ போனை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான முன்பதிவு முடிவடைந்த நிலையில் தற்போது ஜியோ போன் விநியோகம் செய்ய தயாராக உள்ளது. இந்த மாதம் விநியோகம் செய்யப்பட்ட இருந்த ஜியோ போன் முன்பதிவு எண்ணிக்கை அதிகமான காரணத்தினால் அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
ஜியோ போன் இலவசமாக வழங்கப்பட்டாலும் அதனை பெற இருப்பு தொகை ரூ.1500 செலுத்த வேண்டும். மூன்று வருடம் கழித்து போனை திருப்பி கொடுத்துவிட்டு இருப்பு தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது இணையதளத்தில் முதன் முறையாக ஜியோ பியூச்சர் போனை பெறும் வாடிக்கையாளர்களுக்கான விதிமுறையை வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளது. 
 
அதில், மூன்று வருடம் கழித்து அதாவது 36 மாதங்கள் முடிந்த பின் அடுத்த 3 மாதங்களில் போனை திருப்பி கொடுக்க வேண்டும். அப்போது இருப்பு தொகையை வாடிக்கையாளர்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். ஆனால் மொபைல் போன் எந்த சேதமும் அடையாமல் வேலை செய்யும் நிலையில் இருக்க வேண்டும்.   
 
மூன்று வருடம் முடியும் முன்பே வாடிக்கையாளர்கள் ஜியோ போனை திருப்பி கொடுக்கலாம். ஆனால் திருப்பி கொடுப்பதற்கு வாடிக்கையாளர்கள் அதற்கான உரிய தொகையை செலுத்த வேண்டும். 12 மாதங்களுக்கு முடியும் முன்பே திரும்ப கொடுத்தால் ரூ.1500 செலுத்த வேண்டும். 12 முதல் 24 மாதங்களுக்கு இடையில் திருப்பி கொடுத்தல் ரூ,1000 செலுத்த வேண்டும். 
 
24 முதல் 36 மாதங்கள் இடையில் திருப்பி கொடுத்தால் ரூ.500 செலுத்த வேண்டும். 3 வருடம் முடியும் முன் மொபைல் போனை வாடிக்கையாளர்கள் திருப்பி கொடுத்தால் கட்டாயம் மேலே குறிப்பிட்டுள்ள தொகையை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் மட்டுமே செலுத்தப்பட்ட இருப்பு தொகை திரும்ப கொடுக்கப்படும்.
 
இவ்வாறு ஜியோ நிறுவனம் தனது இணையதளத்தில் ஜியோ பியூச்சர் போனை பெறும் வாடிக்கையாளர்களுக்கான விதிமுறைகளை வெளியிட்டு அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments