Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த வெடிக்கு சாம்சங் ரெடி: கேலக்ஸி நோட் 8 விரைவில் அறிமுகம்

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (14:48 IST)
தென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம் வெளியிடு ஒவ்வொரு வகை மாடல் போன்களும் வாடிக்கையாளர்கள் இடையே பெரும் மதிப்பையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

 
இந்நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி நோட் 8 வகை மாடல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சாம்சங் நிறுவனம் வெளியிட்டு வந்த மாடல்கள் பெரும்பாலான மாடல்களில் பிளாட் பேனல் இருந்த நிலையில் இனி வரப்போகும் கேலக்ஸி நோட் 8 மாடலில் கர்வ் டிஸ்ப்ளே பேனல் இருக்கும் என தெரிகிறது. இந்த மாடலில் டூயல் எட்ஜ் டிஸ்ப்ளே இருக்கும் என உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது.
 
கேலக்ஸி நோட் 8 மாடலில் 3.5mm ஹெட்போக் கிடையாது. அதற்கு பதிலாக USB Type-C port வகை ஆடியோ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கேலக்ஸி நோட் 8 மாடல் ட்ரீம் மற்றும் ட்ரீம் 2 கோட்நேமில் தான் வெளிவரும்.
 
சாம்சங் நிறுவனத்திற்கு சொந்தமான எக்ஸினோஸ் 8895 பிராஸசர் இருக்கும் என்றும் இதன் பவர் 3.0GHz இருப்பதால் முந்தைய மாடல்களை விட மிகவும் வேகமாக செயல்படும் என்றும் தெரிகிறது.
 
கேலக்ஸி நோட் 7 மாடலிலும் 6ஜிபி ரேம்தான் உள்ளது. எனவே கேலக்ஸி நோட் 8 மாடலிலும் கண்டிப்பாக 6ஜிபி ரேம்தான் இருக்கும் என எதிர்பபார்க்கப்படுகிறது.

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

அடுத்த கட்டுரையில்
Show comments