இணைய வசதி இல்லாமலே பண பரிவர்த்தனை!!

Webdunia
புதன், 23 நவம்பர் 2016 (17:03 IST)
ஸ்மார்ட் போன் அல்லது இணைய வசதியோ முற்றிலும் அவசியமற்ற வகையில் பண பரிவர்த்தனை செய்ய, சாதாரண செல்போனிலும் இருக்கும் USSD வசதியை பயன்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 


 
 
USSD தொழில்நுட்பத்திற்கு எளிமையான உதாரணம் செல்போனில் இருப்புத்தொகையை பார்ப்பது தான். 
 
அதே போன்ற வழிமுறையில், பண பரிவர்த்தனையும் செய்யலாம் என்பதைத்தான் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
 
எல்லா வங்கி கணக்குகளுக்கும் இந்த முறையை உபயோகிக்க முடியும். இவ்வாறு பண பரிமாற்றம் செய்ய உச்ச வரம்பு ரூ.5000.
 
இந்த சேவை ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் அளிக்கப்படுகிறது. 
 
தமிழுக்கு *99*23# என்ற எண்ணை டயல் செய்து அதில் கூறும் குறிப்புகளை பின்பற்றி பணத்தை ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றலாம். 
 
ஆங்கிலத்திற்கு *99# என்ற என்றும், இந்திக்கு *99*22# என்ற எண்ணையும் பயன்படுத்தலாம். 
 
இத்ற்கு, வங்கியின் IFSC எண், MMID எண் அல்லது ஆதார் எண் அவசியம்.
 
பண பரிவர்த்தனை மட்டுமின்றி வங்கி இருப்புத்தொகையை பார்க்கவும் இதை பயன்படுத்தலாம்.
 
மேலும், இதனை பயன்படுத்த மொபைல் பேங்கிங் (Mobile Banking) செய்ய முன்கூட்டியே வங்கியில் பதிவுசெய்திருக்க வேண்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுதான் என் அரசியல்!.. அரசியல்தான் என் எதிர்காலம்!. விஜய் முதல் பேட்டி...

சென்னையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 9 லட்சம் பேர்.. மீண்டும் சேர்க்கப்படுவார்களா?

நாளை மத்திய பட்ஜெட். சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக ஞாயிறு அன்று பட்ஜெட் தாக்கல்..

தலைகீழாக குறைந்த தங்கம் வெள்ளி: இன்று ஒரேநாளில் ரூ.55000 குறைந்த வெள்ளி விலை.. தங்கம் விலை ரூ.7600 குறைவு..

நான் கிங் மேக்கர் இல்லை.. நிச்சயம் ஆட்சி அமைப்பேன்: விஜய் முதல்முறையாக ஊடகத்திற்கு அளித்த பேட்டி..

அடுத்த கட்டுரையில்
Show comments